Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தி.மு.க. கூட்டணியில் விஜயகாந்த் சேருவார்... அடித்து சொல்லும் குஷ்பு!

சென்னை: தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கண்டிப்பாக சேருவார் என்று காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளார் குஷ்பு நம்பிக்கை தெரிவித்து உள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளரும் நடிகையுமான குஷ்பு, சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, செய்தியாளர்கள் கேட்ட சில கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்கள் வருமாறு:

முதலமைச்சர் ஜெயலலிதா ஆர்.கே.நகர் தொகுதிக்கு சென்று புதிய திட்டங்களை தொடங்கி வைத்துள்ளாரே?

தனது தொகுதி என்ற அடிப்படையில் முதலமைச்சர் ஆர்.கே.நகர் தொகுதிக்கு சென்று திட்டங்களை தொடங்கி வைத்துள்ளார்.

தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சி இணைந்துள்ளதே?

தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சி சேர்ந்துள்ளது. இன்னும் பல கட்சிகள் இந்த கூட்டணியில் இணைய உள்ளன. தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க.வும் கண்டிப்பாக சேரும் என்ற நம்பிக்கை உள்ளது.

மத்திய அமைச்சர் ஜவடேகர், பா.ஜ.க. கூட்டணிக்கு வருமாறு விஜயகாந்துடன் பேசி உள்ளாரே?

தே.மு.தி.க., பா.ஜ.க. கூட்டணிக்கு நிச்சயம் போகாது. இதில் ஜவடேகர் ஏமாற்றம் அடைவார். அவர் அடுத்த முறை பேச்சு வார்த்தை நடத்த சென்னை வருவதற்குள் தி.மு.க. கூட்டணிக்கு தே.மு.தி.க. வந்துவிடும். தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் விரைவில் நல்ல முடிவை எடுப்பார்.

காங்கிரஸ் கட்சியில் தனித்தனி கோஷ்டியாக செயல்படுகிறார்களே? கூட்டணியில் இது பாதிப்பை ஏற்படுத்துமா?

தனித்தனி கோஷ்டி இருந்தாலும் கட்சிக்கு எது நன்மை, எது நல்லது என்று தெரியும். அதை நோக்கி நாங்கள் பயணிப்போம்.

இவ்வாறு அவர் கூறினார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close