Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ப.சிதம்பரம் சிறை செல்வது உறுதி... எச். ராஜா!

தூத்துக்குடி: முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரமும், அவரது மகன் கார்த்தி சிதம்பரமும் விரைவில் சிறைக்கு செல்வது உறுதி என்று எச்.ராஜா தெரிவித்து உள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதி பா.ஜ.க. ஊழியர் கூட்டம் நடைபெற்றது. அதில் பா.ஜ.க. தேசியச் செயலர் எச்.ராஜா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இந்த கூட்டத்தில் அவர், பா.ஜ.க. நிர்வாகிகளுக்கு தேர்தல் குறித்து பல்வேறு அறிவுரைகளை வழங்கினார்.

அதன் பின்னர் எச்.ராஜா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ''முன்னாள் மத்திய நிதி அமைச்சர் சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரமும் இந்தியாவின் முதல் பணக்காரராக உள்ளனர்.

அவர்கள் இருவர் மீதும் பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளது. அதனால், விரைவில் அவர்கள் சிறைக்கு செல்வதும் உறுதி" என்றார்.

எடிட்டர் சாய்ஸ்

ஜெயலலிதா வாழ்வின் சில ‘கடைசி’கள்!

MUST READ