Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'தங்கம், வருங்கால வைப்பு நிதி மீதான வரி விதிப்பை ரத்து செய்ய வேண்டும்'!

சென்னை: பொதுமக்களை பெரும் நெருக்கடிக்கு உள்ளாக்கி இழப்பை ஏற்படுத்தும் தங்கம் மற்றும் வருங்கால வைப்பு நிதி மீதான வரி விதிக்கும் முடிவை மத்திய அரசின்  திரும்ப பெறவேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

" தங்கம் என்பது பண்பாட்டுடன் கலந்த ஒன்றாகி விட்டது. ஏழைகள் வீட்டு திருமணமாக இருந்தாலும், பணக்காரர்கள் வீட்டு திருமணமாக இருந்தாலும் அதற்கான செலவில் முதலிடம் பிடிப்பது  தங்க நகைகள் தான். தங்க நகைகள் அவசியமா? தங்கத்தில் செய்யப்படும் முதலீடுகளுக்கு பயன் உண்டா? என்பன உள்ளிட்ட விடை தெரியாத வினாக்கள் ஏராளமாக உள்ளன. தங்கத்தின் பயன்பாட்டையும், இறக்குமதியையும் குறைப்பதற்கான திட்டங்கள் நீண்ட கால அடிப்படையில், மக்களுக்கு ஆலோசனை வழங்குவதை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும். மாறாக, வரிகளை உயர்த்துவதன் மூலமும், புதிய வரிகளை விதிப்பதன் மூலமும் தங்கத்தின் பயன்பாட்டை குறைத்து விடலாம் என்று நினைத்தால் அது எதிர்மறை விளைவுகளையே ஏற்படுத்தும் என்பதை இந்திய ஆட்சியாளர்கள் உணர வேண்டும்.

2013 ஆம் ஆண்டில் தங்கம் மற்றும் கச்சா எண்ணையின் இறக்குமதி அதிகரித்ததன் காரணமாக நடப்புக் கணக்கு பற்றாக்குறை கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு பெருகியது. இதையடுத்து தங்கத்தின் இறக்குமதியை கட்டுப்படுத்துவதற்காக தங்கம் மீது 10% இறக்குமதி வரி விதிக்கப்பட்டது. இதனால் சட்டப்படியாக இறக்குமதி செய்யப்படும் தங்கத்தின் அளவு குறைந்தாலும், சட்டவிரோதமாக கடத்தி வரப்படும் தங்கத்தின் அளவு அதிகரித்தது. நடப்பு நிதியாண்டின் முதல் 9 மாதங்களில் மட்டும் 7000 கிலோ கடத்தல் தங்கம் பிடிபட்டுள்ளது. அதேநேரத்தில் பிடிபடாத தங்கத்தின் அளவு இன்னும் 10 மடங்கு அதிகமாகும். மத்திய அரசு விதித்த இறக்குமதி வரியால் கிடைத்த வருவாயை விட, தங்கக் கடத்தல் அதிகரித்ததால் ஏற்பட்ட வரி வருவாய் இழப்பு அதிகம் என்பது தான் மறுக்க முடியாத உண்மை.

அதேபோல், இப்போது தங்க நகைகள் மீது விதிக்கப்பட்டுள்ள ஒரு விழுக்காடு உற்பத்தி வரியால் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.300 வரை உயரும். இதனால், கள்ள சந்தையில் தங்கம் விற்கப்படுவது அதிகரிக்கும். இவை எதுவுமே இந்தியாவின் பொருளாதாரத்திற்கும், ஏழைகளின் நலனுக்கும் நன்மை செய்யாது. அதேநேரத்தில் தங்கத்தின் மீதான இறக்குமதி வரியும், தங்க நகைகள் மீதான உற்பத்தி வரியும் ரத்து செய்யப்பட்டால் தங்கம் விலை பவுனுக்கு ரூ.2500 வரை குறையக்கூடும். இது தங்கம் வாங்கும் ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்பதால் தங்கம் மீதான 10% இறக்குமதி வரியையும், நகைகள் மீதான 1% உற்பத்தி வரியையும் மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும்.
 
எனவே, மாத ஊதியம் பெறுவோரின் நலனைக் கருத்தில் கொண்டு வருங்கால வைப்பு நிதிக்கு வரி விதிக்கும் அறிவிப்பை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்துகிறேன்." என்று கூறியுள்ளார்.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ