Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அமைச்சர் சின்னையா நீக்கம்; 3 அதிமுக மாவட்டச் செயலாளர்கள் பதவி பறிப்பு!

சென்னை: தமிழக கால்நடைத்துறை அமைச்சர் பதவியிலிருந்து சின்னையா நீக்கப்பட்டுள்ளார். அவர் வகித்து வந்த கட்சி பதவியும் பறிக்கப்பட்டுள்ளது.

சின்னையா வகித்து வந்த கால்நடைத்துறை இலாகாவை சமூக நலத்துறை அமைச்சர் வளர்மதி கூடுதலாக கவனிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் பரிந்துரையை ஏற்று, இந்த அறிவிப்பு வெளியிடப்படுவதாக ஆளுநர் மாளிகை செய்தி குறிப்பு தெரிவிக்கிறது.

3 மாவட்டச் செயலாளர்களும் நீக்கம்

மேலும் சின்னையா வகித்து வந்த காஞ்சிபுரம் கிழக்கு அதிமுக மாவட்டச் செயலாளர் பதவியிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளார். அவருக்குப்பதிலாக சிட்லபாக்கம் ராஜேந்திரன் அப்பதவியில் நியமிக்கப்பட்டுள்ளார்.

அதேப்போன்று காஞ்சிபுரம் மத்திய அதிமுக மாவட்டச் செயலாளர் பதவியிலிருந்து தண்டரை மனோகரன் நீக்கப்பட்டுள்ளார்.

அதேப்போன்று தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜய பாஸ்கரின் கட்சி பதவியையும் பறித்து அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

அதிமுகவின் புதுக்கோட்டை மாவட்டச் செயலாளராக பதவி வகித்து வந்த விஜயபாஸ்கர், அப்பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும்,  அவருக்குப்பதிலாக பி.கே. வைரமுத்து அப்பதவியில் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ