Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

25 ஆண்டுகளாக சிறைவாசம் அனுபவிக்கும் 7 பேரை விடுதலை செய்ய வேண்டும்: கருணாநிதி!

சென்னை: ராஜீவ் காந்தி கொலைவழக்கில் கடந்த 25 ஆண்டுகாலமாக சிறைவாசம் அனுபவித்து வரும் 7 பேரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.    

இது தொடர்பாக அவர்  வெளியிட்டுள்ள அறிக்கையில்,

"முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு கடந்த 25 ஆண்டுகாலமாக சிறைவாசம் அனுபவித்து வரும் 7 பேரையும் விடுதலை செய்வது என தமிழக அரசு முடிவெடுத்து, அதுகுறித்து மத்திய அரசின் ஆலோசனையைக் கேட்டு, தமிழக அரசின் தலைமைச் செயலாளர், மத்திய உள்துறை செயலாளருக்கு கடிதம் எழுதியுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

கடந்த 25 ஆண்டு காலமாக சிறையில் வாடும் இந்த 7 பேரும், ஏறத்தாழ இரட்டை ஆயுள் தண்டனையை அனுபவித்து வருகின்றனர். மேலும் கடந்த முறை தமிழக அரசு மேற்கொண்ட தவறான அணுகுமுறையால் இவர்களது விடுதலை தள்ளிப்போனது.

தற்போது, தமிழக அரசு எழுதியுள்ள கடிதத்தின் அடிப்படையில் இந்த 7 பேரையும் விடுதலை செய்ய, உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென மத்திய அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்." என்று குறிப்பிட்டுள்ளார்.

 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close