Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

திருமாவளவன் பச்சை கலர் டி-சர்ட் அணிந்த ரகசியம் என்ன?

டந்த 2-ம் தேதி மக்கள் நலக் கூட்டணியின் தலைவர்கள் கிருஷ்ணகிரியில் காலை நடைப் பயிற்சி மேற்கொண்டபோது,விசிக தலைவர் திருமாவளவன் பச்சை கலர் டி-சர்ட் அணிந்து சென்றது சமூக வலைத்தளங்களில் வைரல் ஹிட் அடித்துள்ளது.

வைகோ, ஜி.ராமகிருஷ்ணன், முத்தரசன் ஆகியோர் ஆரஞ்சு, வெள்ளை,  மஞ்சள் நிறங்கள் கலந்த டி-சர்ட் அணிந்து காலைநேர நடைப்பயிற்சி மேற்கொண்டனர். ஆனால் திருமாவளவன் மட்டும் மற்ற மூவர்களுக்கு மாற்றாக கிளிப் பச்சை நிறத்தில் டி-சர்ட் அணிந்து அவர்களுடன் நடைப் பயிற்சி சென்றார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிடப்பட்டிருந்தன. பின்னர் இது தொடர்பாக மீம்ஸ்கள் வாட்ஸ் அப், ஃபேஸ்புக்  ஆகியவற்றில் பலரால் பகிர்ந்துகொள்ளப்பட்டு வைரல் ஆனது.

ஏற்கெனவே திருமாவளவன் மக்கள் நலக் கூட்டணியில் இருந்து விலகிவிடுவார் என்று தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், இந்த பச்சை கலர் டி- சர்ட் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனையடுத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில், "  3 வது கட்ட சுற்றுப்பயணத்தில் உள்ளோம். நடைப்பயிற்சி சென்ற புகைப்படத்தில் தோழர் திருமாவளவன் பனியன், தோழர் முத்தரசன் வேட்டி அணிந்தது பற்றி சில விமர்சனங்கள் வந்திருந்தன.
நான்கு பேருக்கும் தோழர்கள் ஒரே வண்ண பனியன் கொடுத்தார்கள். மகிழ்ச்சியோடு அணிந்தோம். தோழர் திருமாவுக்கு பனியன் சற்று இறுகப் பிடித்திருந்தது. அதனால், கையில் இருந்த மற்றொரு பனியனை அணிந்துகொண்டார். விமர்சிக்க எதுவுமில்லாத நிலையில் - எதையெல்லாம் விமர்சிக்கிறார்கள் என்று ஆச்சர்யமாக இருக்கிறது" என்று பதிவிட்டு விளக்கம் அளித்து இருந்தார்.
 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ