Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தேர்தல் விதிமீறல்களைத் தெரிவிக்க வாட்ஸ்-அப் எண்: புதுச்சேரி தேர்தல்துறை அதிரடி!

புதுச்சேரி: வரும் சட்டமன்றத் தேர்தலில்,  புதுச்சேரியில் நடக்கும் தேர்தல் நன்னடத்தை விதி மீறல்களை வாட்ஸ்-அப் எண்ணில் தெரிவிக்கலாம் என்று புதுச்சேரி தலைமைத் தேர்தல் அதிகாரி கந்தவேலு தெரிவித்துள்ளார்.

தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்குவங்கம், அஸ்ஸாம் ஆகிய ஐந்து  மாநிலங்களுக்குமான சட்டமன்றத் தேர்தல் மே 16-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெறும் என்றும், மே 19-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணையத்தில் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் நசிம் ஜைதி இன்று அறிவித்தார்.

அதன்படி தேர்தல் நன்னடத்தை விதிமுறைககள் அமலுக்கு வந்துவிட்டது. இது தொடர்பாக புதுச்சேரி தலைமை தேர்தல் அதிகாரி கந்தவேலு அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில், ”இன்று முதல் அமலுக்கு வந்துள்ள தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் 21.05.2016 வரை நடைமுறையில் இருக்கும். இந்தத் தேர்தல் அமைதியாகவும் நேர்மையாகவும் நடக்க அனைத்துக் கட்சியினரும் ஒத்துழைப்பு தர வேண்டும்.

வாக்காளர்கள் தங்கள் பெயரை வாக்காளர்கள் பட்டியலில் தேடுவதற்கும், வாக்குச்சாவடி அமைந்துள்ள இடம் மற்றும் தங்கள் வாக்குச்சாவடியின் நிலை அதிகாரி பற்றிய தகவலை தெரிந்து கொள்வதற்காகவும் மொபைல் அப்ளிகேஷன் (mobile app) ஒன்றும் உருவாக்கப்பட்டுள்ளது. அதேபோல பொதுமக்கள் தங்கள் கவனத்திற்கு வரும் தேர்தல் விதிமீறல்களை 8903331950 என்ற வாட்ஸ்-அப் எண்ணிற்கு உடனுக்குடன் போட்டோ மற்றும் வீடியோ மூலம் தெரியப்படுத்தலாம். புகார் அளிப்பவர் பற்றிய தகவல் ரகசியமாக வைக்கப்படும்.

மேலும் தேர்தல் தொடர்பான விபரங்களைத் தெரிந்துகொள்ள 1950 என்ற 24 மணி நேரமும் செயல்படும் இலவசத் தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளலாம். மேலும் தேர்தல் தொடர்பான எந்தப் புகாராக இருந்தாலும் http/:http://ceopuducherry.py.gov.in/ என்ற இணைய முகவரியிலும் பதிவு செய்யலாம்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

-ஜெ.முருகன்
படங்கள்; குரூஸ்தனம்

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!

MUST READ