Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தேர்தலில் தனித்து போட்டி... வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டார் மம்தா!

கொல்கத்தா: மேற்குவங்க சட்டப் பேரவைத் தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி தனித்துப் போட்டியிடும் என்று வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டு அக்கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி அறிவித்து உள்ளார்.

திரிணமூல் காங்கிரஸ் சார்பில் தேர்தலில் போட்டியிடவுள்ள 294 வேட்பாளர்களின் பட்டியலையும் அவர் வெளியிட்டார்.

மேற்குவங்க மாநில சட்டப் பேரவைக்கு வருகின்ற ஏப்ரல் 4-ம் தேதி தொடங்கி மே 5-ம் தேதி வரை 6 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது.
இந்நிலையில், கொல்கத்தாவில் செய்தியாளர்களை சந்தித்த திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், அம்மாநில முதல்வருமான மம்தா பானர்ஜி, ''மேற்கு வங்கத்தில் அமைதியான சூழல் நிலவி வருகிறது. மதம் மற்றும் சமூக ரீதியான பதற்ற நிலை எதுவும் மாநிலத்தில் இல்லை.

மேற்குவங்க சட்டப் பேரவைத் தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் தனித்துப் போட்டியிட உள்ளது. கடந்த தேர்தலில் போட்டியிட எங்கள் கட்சி சார்பில் 31 பெண்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. தற்போது, 45 பெண்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டு உள்ளது. மேலும், சிறுபான்மை சமூகத்தைச் சேந்த 57 பேருக்கு திரிணமூல் காங்கிரஸ் சார்பில் இந்தத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. மாநில முன்னாள் அமைச்சர் மதன் மித்ரா (சாரதா நிதி மோசடி வழக்கில் கைதாகி சிறையில் இருப்பவர்) இந்தத் தேர்தலில் போட்டியிடுகிறார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் மேற்கு வங்கத்தில் கைகோத்துள்ளன. கேரளத்திலும் அவர்கள் ஏன் அவ்வாறு கூட்டணி அமைத்து ஆட்சி புரியக் கூடாது? அப்படி செய்தால் தேர்தல் ஆணையத்துக்கு பண விரயம் இருக்காது. அந்த இரு கட்சிகளும் இணைந்து பொருத்தமற்ற ஒரு கூட்டணியை உருவாக்கியுள்ளன. மேற்கு வங்க சட்டப் பேரவைத் தேர்தலில் அக்கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்கள் டெபாசிட் இழப்பார்கள்" என்றார்.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close