Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

2ஜி வழக்கு சாட்சி ஆசீர்வாதம் பா.ஜ.வில் போட்டியிட விருப்ப மனு!

திருச்சி: ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதியில் பா.ஜ.க. சார்பில் போட்டியிட 2ஜி ஊழல் வழக்கின் சாட்சி ஆசீர்வாதம், இன்று விருப்ப மனு தாக்கல் செய்தார். 

ஆசீர்வாதம் ஆச்சாரி இன்று சென்னையில் உள்ள பா.ஜனதா மாநில தலைமை அலுவலகத்திற்கு வந்து, கட்சித் தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜனிடம் தனது விருப்ப மனுவை தாக்கல் செய்தார். இவர் பா.ஜனதா கட்சியின் பல்வேறு பொறுப்புகளில் உள்ளார். 

இவர் கடந்த ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் போட்டியிடுவார் என கூறப்பட்டது. ஆனால் அது நடக்கவில்லை. இந்நிலையில் தற்போது பா.ஜனதாவில் போட்டியிட ஆச்சாரி  விருப்பமனு தாக்கல் செய்துள்ளார்.

முன்னதாக 2 ஜி வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் தொலைத் தொடர்பு துறை அமைச்சர் ஆ. ராசாவிடம், முன்னாள் உதவியாளராக பணியாற்றியவர் ஆசீர்வாதம். இந்நிலையில் 2 ஜி ஊழல் வழக்கு விசாரணையின்போது இவரும் முக்கிய அரசு தரப்பு சாட்சியாக நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியம் அளித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ