Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஒரே மேடையில் விவாதிக்க தயாரா? அமைச்சர்களுக்கு மு.க.ஸ்டாலின் சவால்!

திருச்சி: அ.தி.மு.க. அரசு தேர்தலில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளதா என்பது பற்றி அமைச்சர்கள் என்னோடு ஒரே மேடையில் விவாதிக்க தயாரா என தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் சவால் விடுத்துள்ளார்.

திருச்சியில் தி.மு.க. மகளிரணி பிரசார ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மகளிரணி செயலாளர் கனிமொழி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது, ''கடந்த 5 ஆண்டுகால அ.தி.மு.க. ஆட்சியில் கொடுத்த வாக்குறுத்திகளை நிறைவேற்றினாலே போதும் புதிய திட்டங்கள் எதுவும் வேண்டாம் என்கிற நிலைக்கு மக்கள் வந்துவிட்டனர்.

மேலும், ஏற்கனவே தமிழகத்தின் கடன் பலமடங்கு உயர்ந்துள்ள நிலையில், 15 ஆயிரத்து 198 கோடி ரூபாய் மதிப்பில் முதலமைச்சர் அறிவிப்புகளை வெளியிட்டிருப்பது யாரை ஏமாற்ற. கடந்த தேர்தலில் அ.தி.மு.க. அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றியது குறித்து அமைச்சர்கள் என்னோடு ஒரே மேடையில் விவாதிக்க தயாரா?" என்று சவால் விடுத்து பேசினார்.

படங்கள்: என்.ஜி.மணிகண்டன்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close