Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

6 தொகுதிக்கு 114 பேர் போட்டி- தி.மு.க.வில் இவர்களுக்குதான் வாய்ப்பு?

சட்டசபை தேர்தலில்,  தி.மு.க. சார்பில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்தவர்களுக்கு அறிவாலயத்தில் நேர்காணல் கடந்த 22-ம் தேதி முதல் நடந்து வருகிறது. தி.மு.க. தலைவர் கருணாநிதி, பொருளாளர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் நேர்காணலை நடத்தி வருகின்றனர். பொதுச்செயலாளர் அன்பழகன், துரைமுருகன், ஆர்.எஸ்.பாரதி ஆகியோரும் நேர்காணலில் பங்கேற்றுள்ளனர்.
 

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, திருவள்ளூர், ஆவடி, பூந்தமல்லி, திருத்தணி ஆகிய 6 தொகுதிகளுக்கு விண்ணப்பித்த 114 பேர்கள் இன்று காலையில் நேர்காணலில் பங்கேற்றனர். இவர்களிடம் தொகுதி நிலவரம், வெற்றி வாய்ப்பு குறித்தும் கருத்து கேட்கப்பட்டது. இதைத் தொடர்ந்து புதுச்சேரி, காரைக்கால் மாநிலங்களுக்கு நேர்காணல் நடந்தது. இன்று மாலை சென்னையில் உள்ள தொகுதிகளுக்கு நேர்காணல் நடத்தப்படுகிறது. இன்றுடன் தி.மு.க. நேர்காணல் முடிவடைவதால் இன்னும் ஓரிரு நாளில் தி.மு.க. தேர்தல் அறிக்கை வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

யாருக்கெல்லாம் வாய்ப்பு


திருவள்ளூர் மாவட்டத்தில் ஆவடி தொகுதி, கிழக்கு மாவட்ட செயலாளரும், நகர்மன்ற தலைவருமான சா.மு.நாசருக்கும், செயற்குழு உறுப்பினர் ராஜேந்திரனுக்கு திருவள்ளூர் தொகுதியும், பாரம்பரிய தி.மு.க. குடும்பத்தை சேர்ந்த காயத்ரி ஸ்ரீராமுக்கு பூந்தமல்லி தொகுதியும், மாதவரம் தொகுதி மாவட்ட செயலாளர் சுதர்சனத்துக்கும் கிடைக்க வாய்ப்புள்ளது.

பொன்னேரி தொகுதி முன்னாள் அமைச்சர் சுந்தரத்துக்கும், முன்னாள் எம்.பி கிருஷ்ணசாமிக்கும் கிடைக்கலாம் என்று சொல்லப்படுகிறது. திருத்தணி தொகுதி முன்னாள் நகர்மன்ற தலைவர் சந்திரனுக்கும், முன்னாள் பள்ளிப்பட்டு ஒன்றிய செயலாளர் ரவிந்திரரெட்டிக்கும், மாவட்ட செயலாளர் வேணு அல்லது டி.ஜி.எஸ். கோவிந்தராஜிக்கும் கும்மிடிப்பூண்டி தொகுதி கிடைக்க வாய்ப்புள்ளது.

-எஸ்.மகேஷ்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ