Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

திமுக கூட்டணியில் தேமுதிக சேரும்- இன்னும் நம்பிக்கையில் இருக்கிறார் கருணாநிதி

திமுக கூட்டணியில் தேமுதிக சேரும் என இன்னும் நம்பிக்கை உள்ளது என்று திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்த கட்சி நிர்வாகிகள், தாெண்டர்களிடம் நேர்காணல் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடந்து வருகிறது. இன்று கொளத்தூர், எழும்பூர் உள்பட 6 தொகுதிகளுக்கு நேர்காணல் நடைபெற்றது.
 

நேர்காணல் முடிந்து கருணாநிதி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:

அனைவரும் எதிர்பார்க்கும் ஒரே கேள்வி, தி.மு.க. - தே.மு.தி.க. கூட்டணி முடிவாகிவிட்டதா?

பழம் கனிந்து கொண்டிருக்கிறது; பாலில் எப்போது விழும் என்று இன்னும் முடிவாகவில்லை.

தே.மு.தி.க கூட்டணி முடிவாவதில் ஏன் இந்தத் தாமதம்? இழுபறிக்கு என்ன காரணம்? அவர்களுடைய கோரிக்கை என்ன?

இழுபறி எதுவும் கிடையாது. அதற்கு மேல் இப்போது எதுவும் சொல்வதற்கு இல்லை.

தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. சேரும் என்று நம்புகிறீர்களா?


நம்பிக்கை நிச்சயமாக இருக்கிறது.

தி.மு.க. தேர்தல் அறிக்கை எப்போது வெளிவரும்?

இன்னும் இரண்டு, மூன்று நாட்களில் வெளியிடப்படும்.

வேறு எந்தக் கட்சிகளுக்காவது கூட்டணியில் சேர அழைப்பு விடுத்திருக்கிறீர்களா?

வேறு எந்த கட்சிக்கும் அழைப்பு விடுக்கவில்லை.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close