Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அக்ரி கிருஷ்ணமூர்த்தி விடுவிப்பு: இந்திய கம்யூனிஸ்ட் அதிர்ச்சி!

சென்னை: வேளாண் அதிகாரி முத்துக்குமாரசாமி தற்கொலை வழக்கிலிருந்து முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி விடுவிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியளிக்கிறது என்றும்,உடனே இந்த வழக்கை மத்திய புலனாய்வுக்கு மாற்ற வேண்டும் என்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அக்கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் வெளியிட்டுள்ள  அறிக்கையில்,

" தமிழ்நாடு அரசின் வேளாண் துறை உதவி செயற் பொறியாளர் முத்துக்குமாரசாமி தற்கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ‘அக்ரி’கிரு~;ணமூர்த்தி வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டது அதிர்ச்சியளிக்கிறது.

ஆரம்பத்திலிருந்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட எதிர்கட்சிகளும் முத்துக்குமாரசாமி உறவினர்களும் இவ்வழக்கினை மத்திய புலனாய்வுத் துறை விசாரணைக்கு மாற்றப்பட வேண்டும் என்று வலியுறுத்தினர் ஆனால் தமிழ்நாடு அரசு சிபிசிஐடி விசாரணையே போதுமானது, அது திறன்மிக்கது என்று கூறிவிட்டது.

வழக்கை விசாரித்த நீதிபதி “சிபிசிஐடி போலீசார் உரிய ஆவணங்களை தாக்கல் செய்யவில்லை, விசாரணையும் நடத்தவில்லை. அதனால் வழக்கில் இருந்து விடுவிக்கிறேன்” என்று கூறியுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

சட்டமன்றத் தேர்தல் அறிவித்துள்ள சூழலில் அக்ரி கிருஷ்ணமூர்த்தியை வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டதில் அரசியல் ஆதாயம் தேடும் முயற்சி தடுக்கப்பட வேண்டும்.

இதற்கான முறையில் சென்னை உயர்; நீதிமன்றத்தின் மதுரை கிளையின் தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்யவும்,வழக்கு விசாரணையை மத்திய புலனாய்வு துறைக்கு மாற்றவும் தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்குமாறு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு கேட்டுக்கொள்கிறது." என்று குறிப்பிட்டுள்ளார்.
   

 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ