Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அக்ரி கிருஷ்ணமூர்த்தி மீதான வழக்கில் சிபிஐ விசாரணைக்கு முன்வராதது ஏன்?: கருணாநிதி

சென்னை: வேளாண் அதிகாரி  முத்துக்குமாரசாமி தற்கொலைக்குக் காரணம் என்று கூறி கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷணமூர்த்தி அந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ள நிலையில்,சி.பி.ஐ. விசாரணைக்கு தமிழக அரசு முன்வராதது ஏன் என்று திமுக தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

" அக்ரி கிருஷ்ணமூர்த்தி மீதான வழக்கு நீதி மன்றத்திலே ரத்து செய்யப்பட்டுள்ளது. நீதிபதி தனது தீர்ப்பைக் கூறும்போது, சி.பி., சி.ஐ.டி. தாக்கல் செய்துள்ள ஆவணங்கள் வழக்குக்குச் சாதகமாக இல்லை என்று கூறித் தான் வழக்கினைத் தள்ளுபடி செய்திருக்கிறார்.

அ.தி.மு.க. அரசு உண்மையிலேயே முத்துக்குமாரசாமி தற்கொலை வழக்கினை நீதி நியாயம் நடக்க வேண்டும் என்றால், தானாகவே இந்த வழக்கில் மேல் முறையீடு செய்வதோடு, விசாரணையை சி.பி.ஐ. இடம் ஒப்படைத்து, முறையாக விசாரித்து என்ன நடந்தது என்பதை உலகத்திற்குத் தெரிவிக்க வேண்டும். முறையான ஆவணங்களைத் தாக்கல் செய்யவில்லை என்று நீதிபதி தமிழகக் காவல் துறையைப் பற்றி தனது தீர்ப்பிலே தெரிவித்திருப்பதிலிருந்தே, தவறு யாரிடம் இருக்கிறது என்று நாட்டு மக்களுக்கு நன்றாகவே தெரிகிறது." என்று குறிப்பிட்டுள்ளார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close