Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

விஜயகாந்த்தை இதற்காகத்தான் எதிர்பார்த்திருக்கிறார் குஷ்பு!

திமுக கூட்டணிக்கு தேமுதிக வந்தால் நன்றாக இருக்கும் என எதிர்பார்த்தோம், ஆனால் தேமுதிக தனித்து போட்டியிடுவதால் திமுக- காங்கிரஸ் கூட்டணிக்கு பாதிப்பில்லை என்று காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார்.
 

தமிழக சட்டப்பேரவை தேர்தல் தொடர்பாக,  டெல்லியில் காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தியை  நடிகை குஷ்பு இன்று சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய குஷ்பு, "தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தல் திட்டம் தொடர்பாக கட்சித் தலைவர் சோனியா காந்தியை சந்தித்து பேசினேன். காங்கிரஸ் கட்சிக்குள் கோஷ்டி பூசல் இருக்கிறதை பற்றி சொல்கிறீர்கள். ஒரு குடும்பத்தில் சில பிரச்னைகள் இருக்கத்தான் செய்யும். காங்கிரசில் கோஷ்டிகளுக்கு தேர்தலில் போட்டியிட சீட் கிடையாது" என்றார்.

சட்டமன்ற தேர்தலில் தேமுதிக தனித்து போட்டியிடப் போவதாக விஜயகாந்த் அறிவித்துள்ளதை குறித்து கருத்து தெரிவித்த குஷ்பு, "நடிகர் என்ற முறையில் விஜயகாந்த்திடம் நன்றாக பழகி இருக்கிறேன். ஆனால், அரசியல் கட்சித் தலைவராக இருக்கும் அவரை நான் சந்தித்து பேசியது கிடையாது. திமுக- காங்கிரஸ் கூட்டணிக்கு தேமுதிக வந்தால் நன்றாக இருக்கும் என எதிர்பார்த்தோம். தேமுதிக தனித்துப் போட்டியிடுவதால் திமுக கூட்டணிக்கு பாதிப்பில்லை. சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுக்கு ஓட்டுபோட மாட்டோம் என மக்கள் தெளிவாக உள்ளனர்" என்றார்.

மேலும் அவர் கூறுகையில், "2ஜி ஊழல் ஐந்து வருடத்துக்கு முன்னர் நடந்தது. இன்னும் அதைபற்றிதான் நாம் பேசிக் கொண்டிருக்கிறோம். விஜய்மல்லையா நாட்டை விட்டு ஓடி இருக்கிறார் என்றால் அதுக்கு முக்கிய காரணம் பாஜக அரசுதான். அரசின் ஆதரவு இல்லாமல் அவர் வெளியேறி இருக்க முடியாது" என்றார்.
 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ