Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சபாஷ் சரியான போட்டி... சரத்குமாருக்கு போட்டியாக ஒரு கட்சி உதயம்!

டந்த சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.கவுடன் கூட்டணி அமைத்த சமத்துவ மக்கள் கட்சி, நெல்லை மாவட்டம் தென்காசி, நாங்குநேரி ஆகிய இரண்டு தொகுதிகளில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றது. தென்காசி தொகுதி எம்.எல்.ஏ.வாக சமகவின் தலைவர் சரத்குமாரும், நாங்குநேரி எம்.எல்.ஏ.வாக துணைத் தலைவர் எர்ணாவூர் நாராயணனும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

ஆட்சி முடியும் தருவாயில் அ.தி.மு.க கூட்டணியிலிருந்து சமக விலகியது. சரத்குமாருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக துணை தலைவர் எர்ணாவூர் நாராயணன், பொதுச் செயலாளர் கரு.நாகராஜன் உள்ளிட்ட சில நிர்வாகிகளை கட்சியிலிருந்து விலகினர். கரு.நாகராஜன் பி.ஜே.பி.யில் சேர்ந்தார். எர்ணாவூர் நாராயணன், 'சமத்துவ மக்கள் கழகம்' (சமக) என்ற புதிய கட்சியை சென்னையில் இன்று தொடங்கியுள்ளார். அ.தி.மு.க கூட்டணியில் சமத்துவ மக்கள் கழகம் இடம்பெறும் என்று எர்ணாவூர் நாராயணன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் நடந்த புதிய கட்சி தொடக்க விழாவில்,  கட்சி கொடியை அறிமுகப்படுத்திய சமத்துவ மக்கள் கழகத்தின் நிறுவனத் தலைவர் எர்ணாவூர் நாராயணன் கூறுகையில், "காமராஜரின் கனவை நினைவாக்கிட சமத்துவ மக்கள் கழகத்தை தொடங்கியுள்ளேன். உண்மை, உழைப்பு, உயர்வு இதுதான் எங்களது தாரக மந்திர கொள்கையாகும். தமிழகத்தை முன்னேற்றப் பாதையில் நடத்திச் செல்வது, இயற்கை விவசாயம், நீர்நிலைகளை பாதுகாப்பது, விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துவது, ஜனநாயகம், சகோதரத்துவம், சமதர்மம், அனைவருக்கும் கல்வி கிடைத்திடவும், தீவிரவாதம், வன்முறை தடுத்தல், ஒரு குடும்பத்திற்கு கட்டாயம் ஒருவருக்கு வேலைவாய்ப்பு உள்ளிட்டவைகளுக்காக பாடுபடுவோம்.

கட்சி கொடியில் சிவப்பு, மஞ்சள், வெள்ளை ஆகிய நிறங்கள் உள்ளன.  வெள்ளை வட்டத்திற்குள் பிரமிடு வடிவிலான கூம்பு சின்னம் இடம் பெற்றுள்ளது. மேலே உள்ள சிவப்பு நிறம் பலத்தையும், தியாகத்தையும், இரக்கத்தையும் வெளிப்படுத்தும். மஞ்சள் நிறம், மகிழ்ச்சியையும், வெற்றியின் அறிகுறியையும், மங்களத்தையும் எடுத்துரைப்பதாகும், நடுவில் உள்ள வெள்ளை நிற வட்டம் வெற்றியின் ஆரம்பமாகும். மேலும் இந்து, முஸ்லீம், கிறிஸ்தவ ஆகிய மதங்களின் ஒற்றுமையை எடுத்துரைக்கும் விதத்தில் எவ்வித பாகுபாடும் இன்றி மக்கள் நலம் பணியாற்றிட எடுத்துரைக்கப்பட்டுள்ளது. சிவப்பு என்பது இயேசு கிறிஸ்துவின் ரத்தத்தை குறிக்கின்றது. மஞ்சள் இந்துக்களின் மங்கள நிகழ்ச்சிக்கு முதலாவதாக பயன்படுத்துவது மஞ்சள் ஆகும். வெண்மை நிறம் இஸ்லாமியர்களின் பிறையும், அந்த நட்சத்திரமும் வெள்ளை நிறத்தை அடிப்படையானது.

இந்த தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளோம். சரத்குமார் போட்டியிடும் தொகுதியில் அவருக்கு எதிராக களமிறங்கும் அ.தி.மு.க வேட்பாளருக்கு ஆதரவாக தீவிர பிரசாரம் செய்வோம். தேர்தலில் போட்டியிட சீட் எதுவும் கேட்கவில்லை. வாய்ப்பு கொடுத்தால் போட்டியிடுவோம்" என்றார்.

-எஸ்.மகேஷ்

எடிட்டர் சாய்ஸ்

ஜெர்சி மாடுகள், பிரேசில் காபி, மருத்துவமனை உறுதி! ஜெயலலிதா பற்றி தோழியின் நினைவலைகள்
placeholder

அதே மாதிரி ஜெயலலிதா தன்னுடைய 10 வயதில் சிவாஜி கணேசன் முன்னிலையில் மயிலாப்பூரில் செய்த நடன அரங்கேற்றப் படங்கள் முதல் அதற்குப் பிறகான அவரது சின்ன வயசுப் படங்களை நாங்கள் தொகுத்திருந்தோம். அதை 2012 ம் ஆண்டு, எனக்கு அவரை சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்த போது கொடுத்தேன். அதைப் பார்த்து ரொம்ப சந்தோஷமாகிட்டாங்க. அந்தப் படத் தொகுப்பை, தன்னோட ஹேண்ட் பேக்ல வச்சுக்கிட்டாங்க. பத்திரமா வைத்துக் கொள்வதாகவும் சொன்னாங்க. சினிமாக்காரங்க என்றால் ஈஸியாக அணுகலாம் என்கிற திரையை உடைத்து, அவங்க தனி ரூட்டைப் போட்டு, அதை மத்தவங்க ஃபாலோ பண்ற அளவுக்கு வாழ்ந்து காட்டினாங்க. குறிப்பா, சினிமா விழாக்கள், நிகழ்ச்சிகளுக்கு போக மாட்டாங்க. 

அம்மாவிடமிருந்து போன் வந்தால்...!? - உருகும் வீணை காயத்ரி
placeholder

''சமீபத்தில் கொலை மிரட்டல் விட்டப் பையனால் அம்மாவை சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. கடந்த ஜூலை 27-ம் தேதி சி.எம் ஆபீஸ்ல இருந்து போன் வந்தது. அம்மா உங்களை உடனே வரச்சொன்னதா சொன்னாங்க. நான் கொஞ்சமும் யோசிக்காமல் போய் நின்னேன். பொதுவாகவே நானும், அவங்களும்தான் தனியாகத்தான் பேசிப்போம். ஆனா, அன்றைக்கு, எல்லா அதிகாரிகளும், இருந்தாங்க. அவங்க முன்னாடி, 'எப்படி இருக்கீங்க' என கேட்டார். நான் பதில் சொல்லிவிட்டு, 'நவம்பர் மாதத்தோடு என்னோட டர்ன் முடியுது' என சொன்னேன். இதற்கு அவர், எல்லோருடைய முன்னிலையிலும், அடுத்த மூன்று வருஷத்துக்கும் நீங்களே துணை வேந்தரா இருங்க என சொல்லிவிட்டு, அவருக்கு பின்னால் இருக்கும் எல்லோரையும் பார்த்து மறுபடியும்  இதையே சொன்னார். அப்போதுதான் அவர்கிட்ட, 'நான் உங்களை சந்திக்க இரண்டு வருஷமாக முயற்சி செய்துட்டு இருந்தேன். இந்த கொலை மிரட்டல் காரணமாகத்தான் உங்களை சந்திக்கிற வாய்ப்பு கிடைச்சிருக்கு, நான் தனி மனுஷியாக இசை பல்கலைக்கழகத்தை நடத்தி வருகிறேன்' என சொன்னேன். உடனே, சம்பந்தப்பட்டவர்களை அழைத்து, அவங்களுக்குத் தேவையான எல்லா உதவிகளையும் செய்து கொடுங்க என சொன்னார்.  'அடுத்த முறைப் பார்க்கும்போது உங்க முகத்துல சிரிப்பை மட்டும் தான் பார்க்கணும்' என ஆறுதல் சொன்னாங்க. அந்த வார்த்தை இன்னும் என் காதில் கேட்டுட்டே இருக்கு. அதுதான் நான் அவங்களை கடைசியாகப் பார்த்தது.  அதற்குப் பிறகு அவரை பார்க்க முடியவில்லை. அவர் சொன்னது போல அதற்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கும்போதே அம்மா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுட்டாங்க. நான் இப்போ அடுத்த ஆர்டருக்காக காத்திட்டு இருக்கேன். இன்னும் ஆர்டர் என் கைக்கு வரவில்லை''

MUST READ