Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பித்தளை, வெள்ளி பாத்திரங்களையும் விட்டுவைக்காத தேர்தல் பறக்கும் படை!

உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட 7 கோடி ரூபாய் ரொக்கம் மற்றும் பித்தளை,  வெள்ளி பாத்திரங்களை தேர்தல் பறக்கும் படை மற்றும் கண்காணிப்பு குழுவினர் பறிமுதல் செய்துள்ளனர்.

தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலுக்கான நன்னடத்தை விதி காரணமாக,  12.03.2016 அன்று உரிய ஆவணங்கள் இல்லாத நிலையில் பல்வேறு மாவட்டங்களில் பறக்கும் படையினரால் ரூ.11,04,900 மற்றும் 78,300 மி.லிட்டர் மதுவகைகள், 27 நைலான் புடவைகள் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டன.

இதில் ராமநாதபுரம் மாவட்டத்தில் ரூ.1.50 லட்சம், சேலம் மாநகரில் ரூ.1,10 லட்சம், கிருஷ்ணகிரியில் 7.84 லட்சம் ரூபாய் ரொக்கம் மற்றும் திருவண்ணாமலையில் 27 நைலான் புடவைகள், விழுப்புரம் மாவட்டத்தில் ரூ.60,900மும்,  மதுரை, திருவாரூர் நெல்லை மாவட்டம்  மற்றும் மதுரை மாநகரில் மதுவகைகளும் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டன.

தேர்தல் விதிமுறைகளை மீறி உரிய அனுமதி பெறாமல் கோயமுத்தூர், மதுரை, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் அமைத்த கட்சி கொடிகள், பேனர்கள், கொடிகம்பங்கள் மற்றும் அனுமதி பெறாமல் சுவர்களில் எழுதிய வாசகங்கள், சாலை ஓரங்களில் கொடிகம்பங்கள் வைக்க குழிகள் தோண்டியது போன்ற காரணங்களால் பல்வேறு கட்சிகளை சார்ந்தவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டன.

கண்காணிப்பு குழுவின் சோதனையின் போது, தஞ்சாவூரில் ரூ.50,000 மதிப்புள்ள பித்தளை, வெள்ளி பாத்திரங்கள், திருச்சியில் ரூ.1,19,320, விழுப்புரத்தில் ரூ.67,000, திருப்பூரில் ரூ.2,38 லட்சம் உட்பட 12.03.2016 அன்று மொத்தம் ரூ.4,24,320 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டன.

தேர்தல் விதிமுறைகளின்படி 12.03.2016 வரை ஆவணங்கள் இல்லாமல் கொண்டு சென்ற ரூ.2,00,88,620 ரொக்கம் பறக்கும் படையினராலும், ரூ.5,01,71,285 நிலையான கண்காணிப்புக் குழுவினராலும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இந்த தகவல் மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

சமூக வலைதளத்தில் எதிரிகளை தாங்களே உருவாக்குகிறார்களா ட்ரம்ப்பும், மோடியும்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close