Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

விசாரணைக்கு வந்த வீடியோ... கலக்கத்தில் அமைச்சர்கள்!

மிழகச் சுற்றுலாத்துறை அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதனின் உதவியாளர் கிருஷ்ணமூர்த்தி (எ) மூர்த்தி கைது செய்யப்பட்ட சம்பவம், அதிமுக வட்டாரத்தில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. இந்த கைதின் பின்புலத்தில் பல அமைச்சர்களின் தலை உருளக்கூடும் என்பதால், உதறலில் இருக்கிறார்கள் அமைச்சர்கள்.

ஒழுங்கு நடவடிக்கை குழுவில் இருந்த ஓ.பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதன், உயர்கல்வித்துறை அமைச்சர் பழனியப்பன் உள்ளிட்ட அமைச்சர்கள் மீது தொடர்ந்து அதிரடி நடவடிக்கை பாய்ந்து வருகிறது. சீனியர் அமைச்சர்கள் சிலர் சிக்கியுள்ள நிலையில், அடுத்தடுத்து அரங்கேறிவரும் தொடர் நடவடிக்கைகள்,  அதிமுகவில் அறிவிக்கப்படாத எமர்ஜென்ஸியாகவே பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், சுற்றுலாத்துறை அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதனின் உதவியாளர், தூத்துக்குடியில் உள்ள கட்சி அலுவலகத்தில் வைத்தே கைது செய்யப்பட்டுள்ளார்.

நாகர்கோயில் - விஜயநாராயணபுரத்தை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்கிற மூர்த்தி, சண்முகநாதனிடம் உதவியாளராகப் பணியாற்றி வந்தார். உதவியாளர் மூர்த்தி என்பதைவிட 'நிழல் அமைச்சர் மூர்த்தி' என்பதுதான் உண்மை.. அமைச்சர் மகன் ராஜாவை அதிமுக வேட்பாளராக்க, பேரம் பேசுவது தொடர்பாக வெளிவந்த வீடியோவில், இடையில் ஆடியோ பேச்சில் மூர்த்தியும் உள்ளார்.

15.3.16 அன்று சென்னையில் உளவுத்துறை போலீசார், அமைச்சர் சண்முகநாதன் மகன் ராஜாவிடமும், உதவியாளரிடமும் விசாரணை நடத்தினார்கள். அன்றைய தினமே இரவு சென்னையிலிருந்து தூத்துக்குடி வந்த மூர்த்திக்கு,  மறுநாள் காலை உடனடியாக மாவட்ட அதிமுக அலுவலகத்தில் இருக்கும்படி உத்தரவு வந்தது. மாவட்ட அலுவலகத்தில் இருந்த போது தூத்துக்குடி போலீசார்,  மூர்த்தியை கைது செய்து மத்திய பாகம் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றார்கள்..

புதூர் பாண்டியபுரத்தைச் சேர்ந்த கிருபானந்த முருகன் என்பவர் 'அமைச்சர் சண்முகநாதனின் உதவியாளர் மூர்த்தி, தூத்துக்குடி அனல் மின்நிலையத்தில் ஒப்பந்தம் எடுத்து தருவதாக லட்சக்கணக்கில் பணம் வாங்கி ஏமாற்றிவிட்டார்' எனக் கொடுத்த புகாரின் அடிப்படையில், மூர்த்தி மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட மூர்த்தியிடம் விசாரித்த போது, "தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் ஒப்பந்தம் எடுத்துக்கொடுக்க, முருகனிடமிருந்து வாங்கிய பணத்தை மின் துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் வீட்டில், அவருடைய உதவியாளரிடம் கொடுத்தேன்" என்று ஒப்புதல் வாக்கு மூலம் கொடுத்துள்ளதாகத் தெரிகிறது. மேலும், "அமைச்சர் சண்முகநாதன் மூலம் அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் ஆகியோருக்கு ஒப்பந்தம் எடுக்க, வேலை வாங்கிதர என்று பல லட்சம் கொடுக்கப்பட்டது. தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் ஆலோசனைபடிதான் கட்சி பதவியிலிருந்து, டெண்டர் வரை எல்லாமே முடிவு செய்யப்பட்டது. தூத்துக்குடி மாவட்ட அதிகாரிகள் அனைவரும் இரு அமைச்சர்களின் ஆலோசனையின்படிதான் செயல்பட்டார்கள்" என்றும் கூறியுள்ளதாக தெரிகிறது.

மூர்த்தியைப் பற்றி தூத்துக்குடி அதிமுக வட்டாரத்தில் பேசினோம்.

"டீலிங் விவகாரங்களை கச்சிதமாக முடிப்பதில் கெட்டிக்காரர் கிருஷ்ணமூர்த்தி. 10 ஆண்டுகளுக்கு மேலாக எஸ்.பி. சண்முகநாதனின் உதவியாளராக இருப்பதற்கு இதுதான் முக்கியக் காரணம். கடந்த சில மாதங்களாகவே தென்மாவட்டங்களில், அமைச்சர்களின் பெயரைச் சொல்லி வசூல் வேட்டை நடந்து வந்திருக்கிறது. தலைமைக்கு நெருக்கமாக இருந்த நத்தம், ஓ.பி.எஸ் உள்ளிட்ட அமைச்சர்களின் பெயரைச் சொல்லி ஒவ்வொருவரிடமும் 10 முதல் 30 லட்சம் வரை வசூல் செய்திருக்கிறார்கள். பணம் கொடுத்தவர்கள் தங்களுக்குத்தான் சீட்டு கிடைக்கும் என்று நம்பிக்கையோடு இருந்திருக்கிறார்கள். அமைச்சர்கள் பெயரைச் சொல்லி வசூலில் ஈடுபடுவதாக கார்டனுக்கு புகார்கள் குவிந்தன. இந்த நிலையில்தான் கடந்த சில தினங்களுக்கு முன்பு, 'சட்டமன்ற தேர்தலுக்கு சீட்டு வாங்கி தருகிறேன்' என்று மூர்த்தி பேசும் வீடியோ ஒன்று வெளியானது. 'நீங்களே அமைச்சருக்கு நேராக பணம் கொடுத்தால், நீங்கள்தான் பணத்துக்கு பொறுப்பு. நான் வாங்கி கொடுத்தால், அந்தப் பணத்துக்கு நான் பொறுப்பு' என்று மூர்த்தி பேரம் பேசுவது அதில் பதிவாகி இருந்தது. இதுதான் இப்போது வில்லங்கமாக முடிந்திருக்கிறது" என்கின்றனர்.

இதனால், சில மூத்த அமைச்சர்கள் பதவி பறிபோவதோடு வழக்கும் பாயுமோ என்று கிலியில் இருப்பதாகவும் கட்சியினர் தெரிவிக்கின்றனர்.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

சமூக வலைதளத்தில் எதிரிகளை தாங்களே உருவாக்குகிறார்களா ட்ரம்ப்பும், மோடியும்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close