Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அ.தி.மு.க. சார்பில் போட்டியிட விரும்பும் திருநங்கைகள்!

திருநங்கைகள் மூன்றாவது பாலினமாக அறிவிக்கப்பட்டு,  அவர்களுக்கு ஓட்டுரிமையும் அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல், வரும் சட்டமன்ற தேர்தலில் சீமானின் நாம் தமிழர் கட்சி சார்பில் தேவி என்ற திருநங்கை, ஜெயலலிதாவின் தொகுதியான ஆர்.கே. நகரில் போட்டியிட உள்ளார்.

இந்நிலையில், வரும் சட்டமன்ற தேர்தலில் எங்களுக்கு வாய்ப்பு தாருங்கள் என்று பல்வேறு திருநங்கைகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழகத்தில் இருக்கும் பல்வேறு திருநங்கைகள்,  தங்கள் சார்பாக சுதா என்ற திருநங்கையை முன்னிறுத்தி தேர்தலை சந்திக்க தயாராகி வருகின்றனர்.

சுயேட்சையாக போட்டியிட வேண்டாம் என முடிவு எடுத்துள்ள இவர்கள்,  அ.தி.மு.க.வில் தங்களுக்கு ஒரு சீட் வழங்க வேண்டும் என்று ஏற்கனவே கோரிக்கை விடுத்திருந்தனர்.

                                                   ( மேலும் படங்களுக்கு - http://bit.ly/1Z44uCX)

அதன் தொடர்ச்சியாக இன்று (17-ம் தேதி) காலை,  திருநங்கை சுதா தலைமையில் ஐம்பதுக்கும் மேற்பட்ட திருநங்கைகள்,  ஊர்வலமாக போயஸ்கார்டனில் உள்ள முதல்வர் ஜெயலலிதாவின் இல்லத்திற்கு சென்றனர். முதல்வரின் இல்லத்திற்குள் நான்கு பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்டதால் நான்கு பேர் உள்ளே சென்று முதல்வரின் உதவியாளரிடம் தங்கள் விருப்ப மனுவை அளித்தனர்.

பின்னர் ராயப்பேட்டை, அவ்வை சண்முகம் சாலையில் உள்ள அ.தி.மு.க.வின் தலைமை அலுவலகத்திற்கு சென்று, அங்கு நடனம் ஆடி தங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.

அதன் பின்னர் சுதா செய்தியாளர்களிடம் கூறுகையில், “எங்களி்ன் உரிமையைதான் நாங்கள் கேட்டுள்ளோம். அம்மா சீட் தருவார்கள் என்று நம்புகிறேன். தமிழகம் முழுவதும் உள்ள திருநங்கைகளின் எதிர்பார்ப்புதான் இது” என்றார்.

-அ.சையது அபுதாஹிர்

படம்: சரவணகுமார்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ