Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தேர்தல் ஃபிளாஷ்பேக்: அதிமுகவில் 'சீட்' தரப்படாத முன்னாள்கள்!

2011 சட்டசபைத் தேர்தலின்போது, அப்போது எம்.எல்.ஏ.க்களாக இருந்த பலருக்கும், முன்னாள் அமைச்சர்களுக்கும், முக்கியப் பிரமுகர்களுக்கும் சீட் தரப்படவில்லை. முன்னாள் அமைச்சர்கள் சி.பொன்னையன், தளவாய் சுந்தரம், ராதாகிருஷ்ணன், ஆர்.ஜீவானந்தம், அப்போது எம்.எல்.ஏ.க்களாக இருந்த பதர்சயீத், பாண்டுரங்கன் என பலரின் பெயர்கள் வேட்பாளர் பட்டியலில் இடம் பெறவில்லை.

ஜெயலலிதாவின் பள்ளித் தோழியான பதர் சயீத் 2006 - 2011ல் அ.தி.மு.க எம்.எல்.ஏ.வாக இருந்தார். அவருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படவில்லை. திருவள்ளூர் மாவட்டத்தில் எம்.எல்.ஏ.க்களாக இருந்த அரி, விஜயகுமார், சிறுனியம் பலராமன் ஆகியோருக்கும் சீட் தரப்படவில்லை. அ.தி.மு.க எம்.எல்.ஏ.வும், முன்னாள் அமைச்சருமான கே.பாண்டுரங்கனுக்கும் அந்த தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டது.

இதேபோல் முன்னாள் அமைச்சர்கள் ஆர்.வில்வநாதன், ஆர்.வடிவேல், வேலூர் கிழக்கு மாவட்டச் செயலளராக இருந்த கே.சிவசங்கரன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் ப.நீலகண்டன், எம்.எஸ்.சந்திரசேகரன், சி.எம்.சூரியகலா, சி.கனகதாரா, பவானி கருணாகரன் உள்ளிட்ட பலருக்கும் வாய்ப்பு தரப்படவில்லை.

திருச்சி மாவட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் அண்ணாவி, கே.கே.பாலசுப்பிரமணியன் ஆகியோருக்கும் சான்ஸ் கிடைக்கவில்லை. புதுக்கோட்டை மாவட்டத்தில் முன்னாள் அமைச்சர் ராதாகிருஷ்ணன், தஞ்சாவூர் மாவட்டத்தில் எம்.எல்.ஏ. இளமதி சுப்பிரமணியன், பேராவூரணி எம்.எல்.ஏ., வீரகபிலன் திருவிடைமருதூர் எம்.எல்.ஏ. பாரதிமோகன், நாகை மாவட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஆர்.ஜீவானந்தம் என பலருக்கும் போட்டியிட வாய்ப்பு தரப்படவில்லை.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ