Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

வாக்காளர்களை வளைக்க ஜெயலலிதா போட்ட அதிரடி உத்தரவு!

வ்வொரு வார்டிலும் வாக்காளர்களை வளைக்க அ.தி.மு.க தலைமை கொடுத்த யோசனையால் உற்சாகத்தில் இருக்கின்றனர் ரத்தத்தின் ரத்தங்கள். விரைவில் கரன்சி மழை பொழியும் என்பதுதான் உற்சாகத்திற்குக் காரணம்.
 

தமிழகம் முழுவதும் வார்டு வாரியாக கமிட்டி கூட்டங்களை நடத்திக் கொண்டிருக்கிறார்கள் அ.தி.மு.க நிர்வாகிகள்.  'வருகிற 21-ம் தேதிக்குள் கமிட்டி கூட்டங்களை முடித்துவிட வேண்டும்' என அ.தி.மு.க தலைமை கறாராகச் சொல்லிவிட்டது. இதன்பின்னர், ஒவ்வொரு வார்டுக்கும் 20 பேர் கொண்ட கமிட்டியை நியமித்திருக்கிறார்கள். இந்தக் கமிட்டியில் எட்டு பேர் பெண்கள். கமிட்டியைக் கண்காணிக்க மூன்று பேர் கொண்ட டீம் தயாராக இருக்குமாம். இதுதவிர, ஒவ்வொரு தொகுதியிலும் பத்தாயிரம் ஓட்டுக்களுக்கும் ஊராட்சி பொறுப்பாளர், தொகுதி பொறுப்பாளர், பேரவை நிர்வாகி என மூன்று பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

"பத்தாயிரம் ஓட்டுக்களை உறுதி செய்வது இவர்களின் பொறுப்பு. இந்தப் பொறுப்புகளில் ஜெயலலிதா பேரவை, இளைஞர், இளம் பெண்கள் பாசறை, தொழிற்சங்கம், எம்.ஜி.ஆர் மன்றம் உள்ளிட்ட அ.தி.மு.க.வின் இதர அமைப்புகளின் நிர்வாகிகளும் இடம் பெற்றுள்ளனர். இவர்களின் பிரதான வேலையே, வீடு வீடாகச் சென்று கணக்கெடுப்பதுதான். 'உங்கள் வீட்டிற்கு அனைத்து இலவசப் பொருட்களும் வந்துவிட்டதா? ஏதேனும் குறைகள் உள்ளதா? வார்டு கட்சி நிர்வாகிகள் சிறப்பாகச் செயல்பாட்டார்களா? என்ன ஜாதி? நிரந்தர வசிப்பிடமா? வீட்டில் எத்தனை ஓட்டுக்கள் உள்ளன? கட்சி சார்ந்தவர்களா? எந்தக் கட்சி?' என்பது உள்ளிட்ட பிரதான கேள்விகள் கணக்கெடுப்பில் அங்கம் வகிக்கின்றனர்.

இந்தக் கேள்விகள் அடங்கிய விண்ணப்பங்கள் அனைத்தும் தலைமைக் கழகத்தில் இருந்து அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பப்பட்டுவிட்டன. வருகிற 21ம் தேதி முதல் கணக்கெடுப்பு நடைபெற இருக்கிறது. இந்தப் பணிகள் முடிந்ததும் வாக்காளர்களை வளைக்க என்ன செய்ய வேண்டும்? என்பதை அடுத்தகட்ட உத்தரவில் அ.தி.மு.க தலைமை அமல்படுத்தும்" என்கின்றனர் அ.தி.மு.க நிர்வாகிகள் சிலர்.

வாக்காளர்களின் வீடுகளுக்கு முதல் தவணையாக, என்ன கொடுக்கப் போகிறார்கள்? என்பதை அறிய ஆவலோடு காத்திருக்கிறார்கள் அ.தி.மு.க தொண்டர்கள்.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ