Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தேமுதிகவுடன் மீண்டும் பேச்சுவார்த்தையா? ஸ்டாலின் சொன்ன பதில்

தி.மு.க. கூட்டணிக்கு தே.மு.தி.க. வர வேண்டும் என்று ஜவாஹிருல்லா கூறியிருப்பது அது அவருடைய சொந்த கருத்து என்று தெரிவித்த திமுக பொருளாளர் மு.க.ஸ்டாாலின், தே.மு.தி.க.வுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெறவில்லை என்று கூறினார்.

திமுக கூட்டணிக்கு தே.மு.தி.க. வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தனித்து போட்டியிடுவதாக விஜயகாந்த் அறிவித்தார். இதற்கு அந்த கட்சியில் பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதைத்தொடர்ந்து தே.மு.தி.க. தனது முடிவை பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது.
 

மக்கள் நலக்கூட்டணி தலைவர்கள் விஜயகாந்த் தலைமையை நாங்கள் ஏற்க மாட்டோம், எங்கள் கூட்டணியில் அவர் இணையலாம் என்று கருத்து தெரிவித்து இருப்பதும் தே.மு.தி.க. தொண்டர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் தே.மு.தி.க.வை தி.மு.க.வை கூட்டணியில் இணைப்பதற்கான வேலைகள் திரைமறைவில் நடந்து வருவதாக கூறப்படுகிறது. பேராயர் எஸ்றா சற்குணம், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா ஆகியோர் தி.மு.க. கூட்டணிக்கு தே.மு.தி.க. வர வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.

தி.மு.க. தலைவர் கருணாநிதியை நேற்று ஸ்டாலின் சந்தித்து பேசினார். இந்த சந்திப்புக்கு பிறகு வெளியே வந்த அவரிடம் செய்தியாளர்கள், தி.மு.க–தே.மு.தி.க. கூட்டணி குறித்து கேள்வி எழுப்பினர்.

அப்போது கேட்கப்பட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:

தே.மு.தி.க.வுடன் தி.மு.க. மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துகிறதா?

நாங்கள் எந்த பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை.

தி.மு.க. கூட்டணிக்கு தே.மு.தி.க. வர வேண்டும் என்று ஜவாஹிருல்லா கூறியிருக்கிறாரே?

அது அவருடைய சொந்த கருத்து.

தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை பின்னர் நடத்தப்படும். தி.மு.க. கூட்டணியில் மேலும் பல கட்சிகள் சேர உள்ளன.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close