Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கூட்டணிக்காக விஜயகாந்த்தை விடாமல் துரத்தும் கருணாநிதி!

திமுக கூட்டணியில் தேமுதிக இணையும் என நம்பிக்கை உள்ளது என்று திமுக தலைவர் கருணாநிதி மீண்டும் தெரிவித்துள்ளார்.

நடைபெற உள்ள தமிழக சட்டப்பேரவை தேர்தலில் பெரிய கட்சிகளான திமுக, அதிமுகவுடன் கூட்டணி வைக்க எந்த கட்சியும் முன்வரவில்லை. இதனால், தேமுதிக தலைவர் விஜயகாந்த்துக்கு, திமுக தலைவர் கருணாநிதி கூட்டணிக்கு வரும்படி அழைப்பு விடுத்தார். இந்த அழைப்பை புறந்தள்ளிய விஜயகாந்த், தனித்து போட்டியிடுவதாக அறிவித்தார்.
 

இதனிடையே, தே.மு.தி.க.வின் 2–ம் கட்ட தேர்தல் அறிக்கையை வெளியிட்டு பேசிய விஜயகாந்த், "60 ஆண்டுகளாக நீங்களும் திமுகவுக்கும், அதிமுகவுக்கும் வாக்களித்து வாக்களித்து அவர்களை பற்றி தெரிந்துகொண்டுவிட்டீர்கள். எனவே இந்த ஒரு தடவை தே.மு.தி.க.வுக்கு வாக்களிக்க வேண்டும்" என வாக்காளர்களுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இந்தநிலையில், திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில்,  கட்சித் தலைவர் கருணாநிதி தலைமையில் இன்று காலை நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:

இன்று நடைபெற்ற மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட முக்கியமான விஷயம் என்ன?

புதுவை உள்ளிட்ட மற்றும் தமிழகத்திலே உள்ள 65 கழக மாவட்டச் செயலாளர்கள் இன்றைய கூட்டத்தில், தலைமைக் கழகத்தின் அழைப்பினை ஏற்று கலந்து கொண்டார்கள். இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட முக்கிய விஷயம், விரைவில் வரவிருக்கின்ற சட்டமன்றத் தேர்தலைப் பற்றித் தான் விவாதிக்கப்பட்டது.

தே.மு.தி.க. தனித்துப் போட்டி என்று அறிவித்திருக்கிறார்கள். அவர்கள் உங்கள் கூட்டணிக்கு வருவார்கள் என்று நம்பிக்கை தெரிவித்திருந்தீர்கள். இந்த நிலையில் உங்கள் நிலைப்பாடு என்ன?

நான் தெரிவித்த நம்பிக்கையை என்னைப் பொறுத்தவரையில் இன்னும் இழந்து விடவில்லை.

தே.மு.தி.க.வோடு நம்பிக்கை இழந்து விடவில்லை என்று சொன்னீர்கள். அவர்கள் தனித்துப்போட்டி என்று அறிவித்திருக்கிறார்கள். எந்த அளவுக்கு உங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது? எப்போது கூட்டணி சம்மந்தமாக அறிவிப்பு வரும் என்று எதிர்பார்க்கலாம்?

நான் எந்த மாதத்தில், எந்தத் தேதியில் என்றெல்லாம் சொல்ல முடியாது. எப்போது அறிவிப்பு என்றும் நாள் குறித்துச் சொல்ல முடியாது. வரலாம்.

கடந்த முறை கூட்டணி காரணமாக தி.மு.கழகம் குறைந்த தொகுதிகளில் தான் போட்டியிடக் கூடிய நிலை ஏற்பட்டது. தற்போதுள்ள நிலையில் இந்தத் தேர்தலில் தி.மு.கழகம் எத்தனை இடங்களில் போட்டியிடத் திட்டமிட்டுள்ளது?

இப்போதுள்ள சூழ்நிலையில், உங்களையெல்லாம் அழைத்து, தலைமைக் கழகத்தில் உட்கார்ந்து, உங்களிடம் எல்லாவற்றையும் விவாதித்து எத்தனை தொகுதிகளில் போட்டியிடுவோம் என்று நான் சொல்வது எனக்கும் நாகரிகமல்ல; கேட்பது உங்களுக்கும் நாகரிகமல்ல.

உங்களுடைய தேர்தல் பரப்புரை எப்போது தொடங்கும்?


பரப்புரையா? தமிழில் கேட்டதற்காக நன்றி என்று கூறினார்.

அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம்!

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

'சாக்கடையில் கலந்த ஜெயலலிதா ரத்தம்!'   -எம்பால்மிங் சீக்ரெட்டை உடைக்கும் மருத்துவர்கள் #VikatanExclusive
placeholder

'இருதயம் செயலிழந்து போனதற்கான காரணம் என்ன? திடீரென்று செயலிழந்து நின்று போன இருதயத்தை ஏன் மீண்டும் செயல்பட வைக்க இயலவில்லை? உலகத் தரம் வாய்ந்த உபகரணங்களையும் நிபுணத்துவத்தையும் தோல்வியைத் தழுவச் செய்த காரணங்கள் யாவை?' என்ற கேள்விகளையே மருத்துவர் பீலேயும் அப்போலோ மற்றும் எய்ம்ஸ் மருத்துவர்களும் தமிழக-இந்திய மருத்துவ உலகத்தாரும் தமிழ்நாடு-மத்திய அரசுகளும் கேட்டிருக்க வேண்டும். அதற்கான பதிலைக் கண்டறிய இயன்றளவில் முயற்சியை மேற்கொண்டிருக்க வேண்டும். ஆனால் அதற்கான ஒரு சிறிய துரும்பு அளவிலான முயற்சியைக்கூட இவர்கள் எவரும் மேற்கொள்ளவில்லை என்பதுதான் உண்மை.

Advertisement

MUST READ

Advertisement
[X] Close