Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அதிமுக ஐடி விங் அஸ்பயர் சாமிநாதன் நீக்கம்!

'கேடான' கோடி நன்றி அம்மா என்ற தலைப்பில் அ.தி.மு.க.வின் ஐ.டி. விங்கினர் அடித்த போஸ்டர்கள் படு பிரசித்தம். அதை அப்படியே முகநூல்களிலும் அவர்கள் பதிவேற்றமும் செய்திருந்தனர். அதுவும் வேறு சிலரின் அக்கவுண்ட்டுகளில். அவர்களுக்குத்தான் முகநூலில் கணக்கே தொடங்கப்படவில்லையே.

இது ஒருபுறமிருக்க அப்படிப்பட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு(?!)க்கு மாநிலச் செயலாளர் பொறுப்புக்கு வந்தவர்தான், அஸ்பயர் சாமிநாதன்.  அ.தி.மு.க.வின் ஐ.டி. விங்கோடு இவர் குறித்த இன்னொரு பக்கமும் நம்முடைய இணையத்தில் இம்மாதம் 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் வெளிவந்தது.

அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெயலலிதாவால் பதவி நீக்கம் செய்யப்பட்ட அமைச்சர்களுடனும், தற்போது ஓடி ஒளிந்து கொண்டிருக்கும் சில அமைச்சர்களின் துணையுடனும்,  ஐ.டி. விங்கிற்கு எட்டாவது பெயில் ஆகிப் போனவர்களைக் கூட மாவட்டச் செயலாளர்களாக அஸ்பயர் சாமிநாதன் போஸ்டிங் போட்டது முதல் அதில் சொல்லியிருந்தோம்.

இந்நிலையில் இன்று மாலை (21.3.2016) அஸ்பயர் சாமிநாதனின் பதவி பறிக்கப்பட்டு, அந்த இடத்துக்கு ஜி.ராமச்சந்திரன்   நியமிக்கப்பட்டிருக்கிறார். இந்த முறையாவது தேர்வு சரியாக இருக்கும் என்று நம்புவோமாக...!

-ந.பா.சேதுராமன்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close