Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தேமுதிகவுடன் கூட்டணி பேச்சு நடக்கவில்லை- ஸ்டாலின்

கூட்டணி குறித்து எந்த பேச்சுவார்த்தையும் தேமுதிகவுடன் நடைபெறவில்லை என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

தேமுதிகவுக்கு ஏற்கனவே விடுத்த அழைப்பைதான் கருணாநிதி குறிப்பிட்டு பேசினார் என்றும், கூட்டணி தொடர்பாக தேமுதிகவுக்கு புதிதாக அழைப்பு விடுக்கப்படவில்லை என்றும் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

தி.மு.க. மாவட்டச்  செயலாளர்கள் கூட்டம்,  அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பிறகு தி.மு.க. தலைவர் கருணாநிதி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "தே.மு.தி.க. வரும் என்பதில் நம்பிக்கை இழந்து விடவில்லை. கூட்டணி சம்பந்தமாக  எந்த மாதத்தில், எந்தத்தேதியில் அறிவிப்பு வரும் என்றெல்லாம் சொல்ல முடியாது. எப்போது அறிவிப்பு என்றும் நாள் குறித்துச்சொல்ல முடியாது. வரலாம்" எனக் கூறினார்.

இந்த நிலையில், சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், "ஏற்கனவே தே.மு.தி.க.வுக்கு தலைவர் கலைஞர் அழைப்பு விடுத்து இருந்தார். அதனைத்தான் அவர் நேற்று குறிப்பிட்டார். புதிதாக அழைப்பு எதுவும் விடுக்கப்படவில்லை. கூட்டணி குறித்து எந்த பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை" என்றார்.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close