Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தே.மு.தி.க.வுடன் இன்று மக்கள் நலக் கூட்டணி தொகுதி உடன்பாடு: வைகோ

சென்னை: மக்கள் நல கூட்டணி கட்சியின் தலைவர்கள், தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த்தை இன்று சந்தித்து கூட்டணி குறித்து பேசி வருகின்றனர். இந்த பேச்சுவார்த்தைக்கு பின் உடன்பாடு குறித்த செய்தியை தெரிவிப்போம் என்று வைகோ தெரிவித்து உள்ளார்.

சென்னை கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. தலைமை அலுவலகத்தில் மக்கள் நல கூட்டணி கட்சியின் தலைவர்கள், தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த்தை சந்தித்து கூட்டணி குறித்து பேசி வருகின்றனர். இதன் மூலம் மக்கள் நலக் கூட்டணி தே.மு.தி.க.வில் இணைய உள்ளதை உறுதிப்படுத்தி உள்ளது.

மக்கள் நல கூட்டணி தலைவர்களை சந்தித்த பின், விஜயகாந்த் செய்தியாளர்களை சந்திக்க உள்ளார். இதில் அவர் மக்கள் நலக் கூட்டணியில் இணைவது குறித்த அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.

கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. தலைமை அலுவலகத்திற்கு வந்த மக்கள் நல கூட்டணி தலைவர்கள் வைகோ, திருமாவளவன், ஜி.ராமகிருஷ்ணன் மற்றும் முத்தரசன் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், பிரேமலதா மற்றும் சுதீஷுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

கூட்டணி குறித்து மக்கள் நல கூட்டணி ஒருங்கிணைப்பாளரும் ம.தி.மு.க.வின் பொதுச் செயலாளருமான வைகோ கூறும்போது, ''தே.மு.தி.க. அழைப்பின் பேரில் விஜயகாந்தை மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள் இன்று சந்திக்கிறோம். மக்கள் நலக் கூட்டணியில் தொகுதி உடன்பாடு குறித்த செய்தியை பேச்சுவார்த்தைக்கு பின் தெரிவிப்போம்" என்றார்.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ