Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மக்கள் நல கூட்டணி ஒரு சவலை குழந்தை... தமிழிசை விமர்சனம்!

சென்னை: மக்கள் நல கூட்டணி ஒரு சவலை குழந்தை என்று பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விமர்சனம் செய்துள்ளார்.

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த்தை, மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள் நேரில் சந்தித்து தங்கள் கூட்டணிக்கு வரும்படி அழைப்பு விடுத்திருந்தனர். இதனிடையே, தி.மு.க. கூட்டணிக்கு தே.மு.தி.க. வரும் என்றும், அதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. 'பழம் நழுவி பாலில் விழும்' என்றும் தி.மு.க. தலைவர் கருணாநிதி நம்பிக்கை தெரிவித்து இருந்தார். இது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் விஜயகாந்தோ, தனித்து போட்டி, எங்களுடன் இணைய விரும்பும் கட்சிகள் வரலாம் என்று அழைப்பு விடுத்தார்.

இந்நிலையில், தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தை மக்கள் நலக் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் சந்தித்து பேசினர். அதன்பின் அவர்களுக்குள் உடன்பாடு ஏற்பட்டு தே.மு.தி.க. 124 இடங்களிலும், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் 110 இடங்களிலும் போட்டியிடுவது என்று முடிவு செய்துள்ளன. மேலும், தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தை முதல்வர் வேட்பாளராகவும் அவர்கள் அறிவித்துள்ளனர்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், ''மக்கள் நலக் கூட்டணி ஒரு சவலைக் குழந்தை. மக்கள் நலக் கூட்டணியில் மக்கள் நலன் கிடையாது. பா.ஜ.க. கூட்டணிக்கு விஜயகாந்த் வந்திருந்தால், விஜயகாந்தின் நோக்கம் நிறைவேறி இருக்கும். பலமே இல்லாத கூட்டணியில் இருந்து கொண்டு விஜயகாந்த் எப்படி மாற்றத்தை ஏற்படுத்த முடியும்" என்று விமர்சித்துள்ளார்.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close