Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'வெற்றிபெறாவிட்டாலும், முதலமைச்சராக வாய்ப்பே இல்லாவிட்டாலும் விஜயகாந்துக்கு வாழ்த்துக்கள்!'

சென்னை: தமிழக தேர்தலில் வெற்றிபெறாவிட்டாலும், முதலமைச்சராக வாய்ப்பே இல்லாவிட்டாலும் முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதற்கு விஜயகாந்துக்கு என் வாழ்த்துக்கள் என்று பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.

சென்னை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், ''மக்கள் நலக் கூட்டணி-தே.மு.தி.க. கூட்டணியால் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்த முடியாது.

தி.மு.க., அ.தி.மு.க.வை ஆட்சிக்குக் கொண்டு வர வேண்டும் என்ற நோக்கில் இந்த கூட்டணி அமைக்கப்பட்டுளளது. இது மக்கன் நலனில் அக்கறை இல்லாத கூட்டணியே. ஆனால், மிக வலுவான கூட்டணியை அமைக்க பா.ஜ.க. முயற்சி மேற்கொண்டுள்ளது. தேசிய ஜனநாயகக் கூட்டணி 234 தொகுதிகளிலும் போட்டியிடும். நாங்கள் தேர்தலில் வெற்றி பெறுவோம். எங்கள் ஆதரவு இல்லாமல் எந்த கட்சியும் ஆட்சி அமைக்க முடியாது.

வெற்றிபெறாவிட்டாலும், முதலமைச்சராக வாய்ப்பே இல்லாவிட்டாலும், முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதற்கு தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்துக்கு என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ