Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

நான் யாரிடமும் விலைபோகவில்லை- விஜயகாந்த் பரபரப்பு பேச்சு

பணத்தாசையில் அங்கே போய்விட்டார், இந்த பக்கம் விலைபோய் விட்டார் என்று சொன்னார்கள். நான் யார்  பக்கமும் விலைபோகவில்லை என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த், மக்கள் நலக்கூட்டணி தலைவர்கள் முன்னிலையில் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.
 

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் மக்கள் நலக்கூட்டணி- தேமுதிக கூட்டணி இடையே தொகுதி உடன்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து, தேமுதிக அலுவலகத்தில் மக்கள் நலக்கூட்டணி தலைவர்கள், தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தார்கள்.

அப்போது, விஜயகாந்த் பேசுகையில், "அனைவருக்கும் வணக்கம், நான் பொதுவா வந்து இந்த மீட்டிங்கில் நிறைய பேசுவேன் என்று நினைத்தேன். ஆனால் எனக்கு முன்னதாக அவர்கள் நிறைய பேசிட்டாங்க.

அதாவது இங்கே நான்கு பேர் வந்தார்கள். நீங்க கிங்கா இருங்க, நாங்க கிங்மேக்கரா இருக்கிறோம் என்றார்கள். கூட்டணி ஆட்சி என்று கேட்டார்கள், தாராளமாக அறிவித்துவிடுங்கள் என்று கூறிவிட்டேன். பணத்தாசையில் விஜயகாந்த் அங்கே போய்விட்டார், இந்த பக்கம் விலைபோய் விட்டார் என்று சொன்னார்கள். நான் யார் பக்கமும் விலைபோகவில்லை. அன்றே சொன்னேன், தெய்வத்தோடும், மக்களோடுதான் கூட்டணி என்று. தெய்வம்தான் வழிகாட்டும். மக்கள் நலக்கூட்டணிக்கு தெய்வம் பிடிக்குமா பிடிக்காதா என்று தெரியாது. ஆனால் எனக்கு தெய்வம் பிடிக்கும். நான்கு பேரும் நான்கு விதமான கொள்கை உடையவர்கள் என்று நினைக்காதீர்கள், நான்கு பேரும் ஒரே கொள்கையை கொண்டவர்கள். என்னை விட இவர்கள் அனைவரும் மூத்தவர்கள்தான். ஏன் என்னை ஏற்றுக்கொள்கிறார்கள், என்னை ஏற்றுக்கொண்ட அவர்களுக்கும், தொண்டர்களுக்கும் நன்றி. அதிக நேரம் நான் பேசவிரும்பவில்லை. இருந்தாலும் இங்கே வந்து எனக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி மக்களே.

சினிமாவில் வசனம் அந்த பக்கம் இந்த பக்கம் என கேட்டு கேட்டு பேசுவதால்தான் நான் ஒரே பக்கமாக பார்த்து பேச மாட்டேன். பல பக்கம் பார்த்து பேசுவேன். எழுதி படித்தால் கீழே குனிய வேண்டியதிருக்கும். அப்போது கத்துவாங்க. கத்துனா எனக்கு கோபம் வரும். இயற்கையான கோபம்தான். அவுங்களுக்கு என்னன்னா விஜயகாந்த் பேச்சை நிறுத்திட்டாரே, அப்படி என்கிற கோபம். இங்கே இருக்கிற அனைவருக்கும் நன்றி வணக்கம்" என்று பேச்சை முடித்தார்.

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!

MUST READ