Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ம.ந.கூ.-தே.மு.தி.க. கூட்டணியால் தி.மு.க.வுக்கு பாதிப்பு இல்லை: ஸ்டாலின்

சென்னை: மக்கள் நல கூட்டணியுடன் தே.மு.தி.க. கூட்டணி அமைத்துள்ளதால் தி.மு.க.வுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்து உள்ளார்.

மக்கள் நல கூட்டணியுடன் தே.மு.தி.க. கட்சி கூட்டணி அமைத்துள்ள நிலையில், தி.மு.க. பொருளாளர் மு.க. ஸ்டாலினை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்கள் சந்தித்து கருத்து கேட்டனர்.

அப்போது அவர், ''இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியுடன் நடந்த பேச்சுவார்த்தை சமூகமாக முடிந்தது. கருணாநிதியுடன் கலந்து ஆலோசித்துவிட்டு தொகுதி பங்கீடு முடிவு செய்யப்படும்.

மக்கள் நல கூட்டணியுடன், தே.மு.தி.க. கூட்டணி அமைத்துள்ளதால் தி.மு.க.வுக்கு எந்த பாதிப்பும் கிடையாது. தி.மு.க. தனது தேர்தல் பணிகளை மேற்கொள்ளும். காங்கிரஸ் கட்சியுடன் தொகுதி பங்கீடு பற்றி ஓரிரு நாளில் பேச்சு வார்த்தை நடத்தப்படும்" என்றார்.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ