Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'நல்லதோர் வீணை செய்து....!': - விஜயகாந்த்தை விமர்சிக்கிறாரா பாலபாரதி எம்.எல்.ஏ?

க்கள் நலக் கூட்டணியில் விஜயகாந்த் இணைந்தது குறித்த செய்திகள் சேனல்களில் பரபரப்பாக ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் நேரத்தில், திண்டுக்கல் சி.பி.எம் கட்சி எம்.எல்.ஏ பாலபாரதியின் ஃபேஸ்புக் ஸ்டேட்டஸை அதிர்ச்சியோடு கவனிக்கிறார்கள் மார்க்சிஸ்டுகள்.

'நல்லதோர் வீணை செய்து...!' என்ற பாரதியின் வரிகளை மட்டும் பாலபாரதி பதிவு செய்திருக்கிறார். அதற்குக்கீழ் வந்த கமெண்ட்டுகளில், 'விஜயகாந்த் என்ற புழுதியிடம் சேர்த்தாச்சு', 'கண்கலங்க வேண்டாம் தோழி, உங்கள் நேர்மையில் கண்கலங்கிவிட்டேன். பாழாய் போன அரசியல்', 'இப்போதுதான் கொள்கை பற்றோடு பேசும் அரசியல்வாதியைப் பார்க்கிறேன்' என்றெல்லாம் பாலபாரதியின் ஸ்டேட்டஸுக்கு கமெண்டுகள் குவிகின்றன. இதற்கு ஒரே ஒரு இடத்தில் மட்டும், ' கண்கலங்கவேண்டாம். அப்படியென்ன இதில் நேர்மையுள்ளது. நீங்கள் எதிர்பார்க்கும் நேர்மை எனக்கில்லை' எனப் பதில் தருகிறார் பாலபாரதி.

'இந்தக் கூட்டணியை உங்களுக்குப் பிடிக்கவில்லையா?' என்ற கேள்வியை பாலபாரதியின் ஃபேஸ்புக் இன்பாக்ஸில் பதிவு செய்தேன். இன்னமும் தோழரிடம் இருந்து பதில் வரவில்லை.


' பாலபாரதியின் அதிருப்திக்கு என்ன காரணம்?' என்ற கேள்வியை மார்க்சிஸ்ட் கட்சியின் நிர்வாகி ஒருவரிடம் கேட்டேன்.

" குறுகியகால வெற்றி என்ற அடிப்படையில், விஜயகாந்த்தோடு கூட்டணி சேர்ந்ததில் பெரும்பாலான மார்க்சிஸ்ட் தொண்டர்களுக்கு விருப்பமில்லை.

அவர்கள் இதை ஏற்றுக் கொள்ளவில்லை. அகில இந்திய அளவில் மாற்றத்தை நோக்கிய கொள்கைளை முன்வைக்கிறோம். தமிழ்நாட்டிலும் குறைந்தபட்ச செயல்திட்டம் என்ற பெயரில் தேர்தல் பிரசாரத்தை தீவிரமாக நடத்தி வருகிறோம். கொள்கைரீதியான மாற்றையும் மக்கள் நலக் கூட்டணிக்குள் நாங்கள்தான் முன்வைத்தோம். 'இரண்டு திராவிடக் கட்சிகளை ஒழிக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக விஜயகாந்தை ஏற்றுக் கொள்வோம்' என எங்களுக்குள் நாங்களே சமாதானம் செய்து கொள்கிறோம். விஜயகாந்த்தைவிட ஓட்டு சதவீதத்தில் நாங்கள் பலம் குறைந்தவர்கள்தான். இருப்பினும், தொடக்கத்தில் இருந்தே முதலமைச்சர் வேட்பாளர் என்று சொல்வதை எங்கள் கட்சி விரும்புவதில்லை. மக்களால் தேர்வு பெற்ற ஒருவர்தான் முதலமைச்சராக வர வேண்டும் என்பதுதான் எங்கள் நிலைப்பாடு. அதற்கு மாற்றாக, விஜயகாந்த்தை முதல்வர் வேட்பாளராக அறிவித்ததையும் எங்களால் ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை. இது கொள்கையில் ஏற்பட்ட சறுக்கு. இந்த வேதனையை பாலபாரதி வெளிப்படுத்தியிருக்கலாம்" என்றார் நிதானமாக.

பாலபாரதியின் கருத்து,  கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்துமா அல்லது  கூட்டணி ஓட்டத்தில் கரைந்து போகுமா? என்பதெல்லாம் போகப் போகத் தெரியும். (பாலபாரதியின் இந்தக் கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியதால், தனது ஃபேஸ்புக் பக்கத்தில் இருந்து இந்தப் பதிவை நீக்கிவிட்டார்)


-ஆ.விஜயானந்த்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

எடிட்டர் சாய்ஸ்

வீட்டுக்கு அருகில் இருக்கும் பட்டாசுக் கடைகள் பாதுகாப்பாக இருக்கிறதா? தெரிந்து கொள்வோம்
ராஜநாகம் முதல் குரைக்கும் மான் வரை... இந்திய உயிரினங்களை அழிக்கும் சீன மருத்துவம்!
placeholder

‘ஒன்றின் கழிவு மற்றொன்றின் உணவு’ என்ற தத்துவத்தின் அடிப்படையிலானது உயிர்சங்கிலி. அந்த சங்கிலியின் பிணைப்பு பலமாக இருக்கும் வரை பாதுகாப்பாக இருக்கும். பிணைப்பின் பிடி தளர்வது பல்லுயிர் பெருக்கத்துக்கும், உயிர்சூழலுக்கும் உகந்தது அல்ல. மனிதர்கள், தாவரங்கள், விலங்குகள், நுண்ணுயிர்கள் என அனைத்துக்குமானது தான் இப்பூவுலகு. ஆனால், இது தனக்கு மட்டுமானது என்ற மனிதனின் பேராசை, உயிர் சங்கிலியை உடைத்தெறிந்து பூமியை சூடாக்கி, பருவநிலையை மாற்றி, வெள்ளம், வறட்சி என பல்வேறு தளங்களில் சிக்க வைத்து சீரழித்துக்கொண்டிருக்கிறது. எலியை பாம்பு உண்பதும், பாம்பை கழுகு தின்பதும் பல்லுயிர் பெருக்கத்தின் ஒரு அங்கம். ஆனால், இதில் ஒன்று அழிந்தாலும் அதற்கான இரை பல்கி பெருகி பல்வேறு பிரச்னைகளை தோற்றுவிக்கும். அதுதான் தற்போது நிகழ்ந்துக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் பல்வேறு உயிரினங்கள் ஆண்டுக்காண்டு அழிந்து வருகின்றன. 

MUST READ