Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஜெயலலிதாவுடன் சரத்குமார் திடீர் சந்திப்பு- மீண்டும் அதிமுகவுடன் கூட்டணி!

அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவை, அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் சந்தித்து பேசியதோடு, அதிமுக கூட்டணியில் இணைந்து சமத்துவ மக்கள் கட்சி போட்டியிடும் என்று அறிவித்தார்.
 

கடந்த சட்டமன்ற தேர்தலில், அதிமுகவுடன் சரத்குமாரின் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி கூட்டணி அமைத்து போட்டியிட்டு,  இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்றது. ஆட்சி முடியும் தருவாயில் திடீரென அதிமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக சரத்குமார் அறிவித்தார். இதைத் தொடர்ந்து சமத்துவ மக்கள் கட்சி இரண்டாக உடைந்தது. எர்ணாவூர் நாராயணன் தலைமையில் சமத்துவ மக்கள் கழகம் உருவானது. இந்த கட்சியும் அதிமுகவுக்கு ஆதரவான நிலைபாட்டை எடுத்துள்ளது.

இதைத் தொடர்ந்து தமிழக பாஜனதாவை சேர்ந்த மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனை, சரத்குமார் சந்தித்து பேசினார். இந்த சந்திப்புக்கு பின்னர், பா.ஜனதா கட்சியுடன் சேர்ந்து சட்டமன்ற தேர்தலை சந்திப்பதாக தெரிவித்தார்.

இந்த நிலையில், அதிமுக பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதாவை இன்று அவரது போயஸ் கார்டன் இல்லத்தில் சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் இன்று பிற்பகலில் திடீரென சந்தித்து பேசினார்.

இந்த சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சரத்குமார், அதிமுக கூட்டணியில் இணைந்து சமத்துவ மக்கள் கட்சி போட்டியிடும் என்றும், எத்தனை தொகுதி என்பது குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

மேலும், சமத்துவ மக்கள் கட்சி பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள் விருப்பதை ஏற்று அதிமுகவுடன் மீண்டும் கூட்டணி அமைத்துள்ளோம் என்றும் கூறினார்.

 

எடிட்டர் சாய்ஸ்