Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கு எத்தனை இடங்கள்? : குலாம் நபி ஆசாத் பதில்

சென்னை: தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தொகுதி  பங்கீடு தொடர்பாக, தி.மு.க. தலைவர் கருணாநிதியை இன்று சந்தித்து காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் பேச்சுவார்த்தை நடத்தினார். அதன்பின் அவர் கூறும்போது, கூட்டணிக்கு மேலும் சில கட்சிகள் வர வாய்ப்புள்ளதால், எத்தனை இடங்கள் என்பது முடிவு செய்யப்படவில்லை என்றார்.

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் தி.மு.க.வுடன் கூட்டணியில் உள்ள காங்கிரஸ், மனித நேய மக்கள் கட்சி, இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை தற்போது தீவிரப்படுத்தியுள்ளன. முதலில் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 5 தொகுதிகளை தி.மு.க. ஒதுக்கி கொடுத்துள்ளது. இதை தொடர்ந்து, காங்கிரசுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்த தி.மு.க. முடிவு செய்து,  அழைப்பு விடுத்திருந்தது.

இந்நிலையில் தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த, தி.மு.க. தலைவர் கருணாநிதியின் சென்னை கோபாலபுரம் இல்லத்திற்கு காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவர் குலாம் நபி ஆசாத், மேலிடப் பிரதிநிதி முகுல் வாஸ்னிக் ஆகியோர் இன்று நேரில் வந்து கருணாநிதியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.



இந்த பேச்சுவார்த்தையின்போது, தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைக்கப்பட்ட 4 பேர் கொண்ட குழுவினரும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தலைமையில் அமைக்கப்பட்ட 8 பேர் கொண்ட குழுவினரும் பங்கேற்றனர். இந்த சந்திப்பின் போது, காங்கிரஸ் கட்சிக்கு எத்தனை தொகுதி, எந்தெந்த தொகுதி என்பது குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது என கூறப்படுகிறது.

இந்நிலையில், கருணாநிதியை சந்தித்தப் பின் குலாம் நபி ஆசாத் செய்தியாளர்களிடம் கூறும்போது, ''தமிழக சட்டமன்றத் தேர்தல் வியூகம் குறித்து கருணாநிதியுடன் பேச்சுவார்த்தை நடத்தினோம். தி.மு.க.-காங்கிரஸ் இடையே இன்று நடைபெற்ற தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை நிறைவு பெற்றது.



கூட்டணிக்கு மேலும் சில கட்சிகள் வர வாய்ப்புள்ளதால், எத்தனை இடங்கள் என்பது முடிவு செய்யப்படவில்லை. எனவே, கூட்டணி இறுதி செய்யப்பட்டதும், மீண்டும் ஒரு முறை பேச்சுவார்த்தை நடத்தி தொகுதிப் பங்கீடு பற்றி முடிவு செய்யப்படும்" என்றார்.

படங்கள்: சு. குமரேசன்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement
Advertisement
[X] Close