Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'காமராஜர் படிக்கச்சொன்னார்.... அம்மா குடிக்கச்சொன்னார்!' - குஷ்பு பொளேர்!

நாகர்கோவில்: காமராஜர் படிக்கச்சொன்னார், அம்மா குடிக்கச்சொன்னார்  என்று முதல்வர் ஜெயலலிதாவை காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் குஷ்பு, காட்டமாக தாக்கிப் பேசினார்.

காங்கிரஸ் கட்சி சார்பில் நாகர்கோவிலில் பொதுக்கூட்டம் நடந்தது. இதில் அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் குஷ்பு கலந்துகொண்டு பேசினார். கூட்டத்தில் அவருக்கு வீரவாள் பரிசளிக்கப்பட்டது.

அதனை பெற்றுக் கொண்டு மைக் பிடித்த குஷ்பு, “ 130 வருட பாரம்பர்யத்தை கொண்டது காங்கிரஸ் கட்சி. காங்கிரஸில் இருந்து துண்டானதுதான் பிஜேபி மற்றும் திராவிட கட்சிகள். பண பேரத்தில் மக்கள் சிக்கிவிடக் கூடாது. விரைவில் இலைகள் உதிரும், சூரியன் உதிக்கும்.

ஜெயலலிதா, 'மக்களால் நான், மக்களுக்காக நான்' என சொல்கிறார். மக்களுக்காக என்ன செய்தார் அவர்? எந்த தொகுதியில் மக்களின் குறைகளை கேட்டார். சென்னையில் மழைவெள்ளம் எல்லாவற்றையும் அடித்து போனது. அவர் முதல்வராக எங்கும் போகவில்லை. ஒரு புறம் பெங்களூரு சொத்துக் குவிப்பு  வழக்கு போயிட்டுருக்கு , இன்னொரு புறம் எந்த நலத்திட்டமும் மக்களே  போய் சேரவில்லை. இன்று அதிமுகவினர்,  அதிமுக ஆட்சியை காமராஜர் ஆட்சினு சொல்றாங்க. காமரஜர் படி படி என்றார். இந்த அம்மா குடி குடி என்கிறார். கேரளாவில் மதுவிலக்கு  சாத்தியப் படுத்தும்போது ஏன் தமிழகத்தில் சாத்தியப்படுத்த முடியாது.  தாலிக்கு தங்கம் கொடுத்து விட்டு டாஸ்மாக் மூலம் அதனை பறித்து விடுகிறார்.

பிரதமர் மோடிக்கு எந்த பிரச்னை பற்றியும் பேச நேரமில்லை. உலகம் சுற்றும் மோடி கொஞ்சம் இந்தியாவுக்கும் வரணும். மாணவர் பிரச்னைபற்றி கூட வாய் திறக்கவில்லை. ஆனால் யோகா செய்யுங்கள் என்கிறார். பிஜேபி ஆட்சியால் எந்த நன்மையும் இந்தியாவுக்கு கிடைக்கவில்லை. அதிமுக ஊழல் ஆட்சியால் தமிழகமும் முன்னேறவில்லை. வரும் தேர்தலில் மக்கள் இவர்களுக்கு பாடம் புகட்டுவார்கள். மாற்றம் வரும்.  திமுக-காங்கிரஸ் ஆட்சி அமைக்கும் ”என்று பேசினார்.

- த.ராம்
படம்; ரா.ராம்குமார்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ