Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பா.ஜ.க. வேட்பாளர் முதல் பட்டியல் வெளியீடு: எச்.ராஜா, வானதி போட்டி!

புதுடெல்லி: தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் பா.ஜ.க. வேட்பாளர்களின் 54 பேர் கொண்ட முதல் பட்டியலை பா.ஜ.க. மேலிடம் நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு வெளியிட்டது. இந்த பட்டியலில், பா.ஜ.க. தேசிய செயலர் எச்.ராஜா, மாநில துணைத் தலைவர் வானதி ஸ்ரீனிவாசன் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் இடம் பெற்றுள்ளனர்.

தமிழக சட்டசபைக்கு வருகின்ற மே 16-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் பா.ஜ.க. சார்பில் போட்டியிடும் உத்தேச வேட்பாளர்களின் பட்டியலுடன் அக்கட்சியின் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்ட நிர்வாகிகள் டெல்லி சென்றனர். இதைத் தொடர்ந்து வேட்பாளர்களை இறுதி செய்வதற்காக, அக்கட்சியின் மத்திய தேர்தல் குழுக் கூட்டம், கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷா தலைமையில் நேற்று நடைபெற்றது.

இந்த கூட்டத்தில், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, தமிழக பா.ஜ.க. தேர்தல் பொறுப்பாளரும் மத்திய இணை அமைச்சருமான பிரகாஷ் ஜவடேகர், தமிழகத்தைச் சேர்ந்த மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், பா.ஜ.க. தேசிய பொதுச் செயலர் முரளிதர்ராவ், மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன், மாநில துணைத் தலைவர் மோகன்ராஜுலு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில்,  தமிழக சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. சார்பில் போட்டியிடும் 54 வேட்பாளர்கள் அடங்கிய முதல் பட்டியலுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதன்பின், இறுதி செய்யப்பட்ட வேட்பாளர்களின் முதலாவது பட்டியலை மத்திய அமைச்சரும் தேர்தல் குழு செயலாளருமான ஜே.பி.நட்டா வெளியிட்டார்.

அதன்படி, 1. கும்மிடிப்பூண்டி- எம்.பாஸ்கர்

2. திருத்தணி- எம்.சக்கரவர்த்தி

3. ஆவடி- ஜே.லோகநாதன்

4. பெரம்பூர்- பிரகாஷ்

5. சைதாப்பேட்டை- காளிதாஸ்

6. தியாகராயநகர்- எச்.ராஜா

7. காஞ்சீபுரம்- டி. வாசன்

8. ஆம்பூர்- வெங்கடேசன்

9. ஓசூர்- ஜி.பாலகிருஷ்ணன்

10. தளி- பி.ராமச்சந்திரன்

11. பென்னாகரம்- கே.பி.கந்தசாமி

12. செய்யாறு- பி.பாஸ்கரன்

13. செஞ்சி- எம்.எஸ்.ராஜேந்திரன்

14. விழுப்புரம்-ஆர். ஜெயக்குமார்

15. கெங்கவல்லி-சிவகாமி பரமசிவம்

16. சேலம் தெற்கு-அண்ணாதுரை

17. திருச்செங்கோடு-நாகராஜன்

18. ஈரோடு கிழக்கு-பி.ராஜேஷ்குமார்

19. ஈரோடு மேற்கு-என்.பி.பழனிச்சாமி

20. காங்கேயம்- உஷாதேவி

21. பவானி- சித்திவிநாயகம்

22. பவானிசாகர்(தனி)-என்.ஆர்.பழனிச்சாமி

23. உதகமண்டலம்-ஜெ.ராமன்

24. திருப்பூர் வடக்கு-சின்னச்சாமி

25. திருப்பூர் தெற்கு-பாயிண்ட் மணி

26. சூலூர்-மோகன் மந்திராசலம்

27. கோவை தெற்கு-வானதி சீனிவாசன்

28. சிங்காநல்லூர்-சி.ஆர்.நந்தகுமார்

29. ஒட்டன்சத்திரம்-எஸ்.கே.பழனிச்சாமி

30. கரூர்- கே.சிவசாமி

31. திருச்சி கிழக்கு-

32. நாகப்பட்டினம்-நேதாஜி

33. வேதாரண்யம் -வேதரத்தினம்

34. கும்பகோணம் -அண்ணாமலை

35. பட்டுக்கோட்டை -கருப்பு முருகானந்தம்

36. பேராவூரணி -ஆர்.இளங்கோ

37. மானாமதுரை (தனி) -எம்.ராஜேந்திரன்

38. மதுரை கிழக்கு -எம்.சுசீந்திரன்

39. சோழவந்தான் (தனி) -எஸ்.பழனிவேல்சாமி

40. திருமங்கலம் -வி.ஆர்.ராமமூர்த்தி

41. போடிநாயக்கனூர் -வி.வெங்கடேசுவரன்

42. சாத்தூர் -பி.ஞானபண்டிதன்

43. விருதுநகர்- சி.காமாட்சி.

44. பரமக்குடி (தனி)-பொன்.பாலகணபதி.

45. விளாத்திக்குளம்-பி.ராமமூர்த்தி.

46. தூத்துக்குடி-எம்.ஆர்.கனகராஜ்.

47. ஒட்டப்பிடாரம் (தனி)-ஏ.சந்தனகுமார்.

48. கடையநல்லூர்-கதிர்வேல்

49. கன்னியாகுமரி-எம்.மீனாதேவ்.

50. நாகர்கோவில்-எம்.ஆர்.காந்தி.

51. குளச்சல்- பி.ரமேஷ்.

52. பத்மநாபபுரம்-எஸ்.ஷீபா பிரசாத்.

53. விளவங்கோடு-சி.தர்மராஜ்.

54. கிள்ளியூர்-பொன்.விஜயராகவன்.

வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட ஜே.பி.நட்டா, செய்தியாளர்களிடம் கூறும்போது, ''தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் போட்டியிட 10-க்கும் மேற்பட்ட தொகுதிகளை கட்சித் தொண்டர்கள் பரிந்துரை செய்துள்ளனர். இது தொடர்பாக மேலிடம் தீவிரமாக ஆராய்ந்து வருகிறது. விரைவில் அவர் போட்டியிடும் தொகுதியின் பெயர் அறிவிக்கப்படும்

பா.ஜ.க.வுடன் கூட்டணி சேர்ந்துள்ள இந்திய ஜனநாயக கட்சி, புதிய நீதிக்கட்சி, தேவநாதன் யாதவ் தலைமையிலான இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகம் ஆகியவற்றுடன் தொகுதிப்பங்கீடு பேச்சு நடந்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக பா.ஜ.க. போட்டியிடும் மற்ற தொகுதிகளின் விவரம் விரைவில் வெளியிடப்படும்" என்றார்.

இதேபோல கேரளத்தில் பா.ஜ.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அடங்கிய 51 பேர் பட்டியலையும் அக்கட்சியின் மத்திய தேர்தல் குழு வெளியிட்டுள்ளது. அதில், சமீபத்தில் அக்கட்சியில் சேர்ந்த கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் திருவனந்தபுரத்தில் போட்டியிடுவார் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் இதர அரசியல் கட்சிகள் தங்கள் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை அறிவிக்காத நிலையில், பா.ஜ.க. துணிச்சலுடன் முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close