Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சீமானை இப்படியெல்லாம் வசைபாடுகிறது ஒரு கட்சி!

ஊழல் குற்றவாளி ஜெயலலிதாவிற்கு ஆதரவாக பிரச்சாரத்தை மேற்கொண்ட சீமான், சட்டப்பேரவை தேர்தலில் டெபாசிட் தொகையை இழப்பார் என்று ஆம் ஆத்மி கட்சியின் தமிழக ஒருங்கிணைப்பாளர் வசீகரன் கடுமையாக விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஆம் ஆத்மி கட்சிக்கு தமிழகத்தில் வாக்குகள் இல்லை என்று நாம் தமிழர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார். ஆம் ஆத்மி கட்சி ஆரம்பித்த இரண்டு ஆண்டுகளுக்குள் 2014ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் கிட்டத்தட்ட 20 தொகுதிகளில் தனித்து நின்று  2.5 லட்சம் வாக்குகளை தமிழ் மக்கள் ஆம் ஆத்மி கட்சிக்காக பதிவு செய்திருந்தார்கள் என்பதை அவர் நினைவில் கொள்ளவில்லை.

மேலும் நாம் தமிழர் கட்சி இதுவரைக்கும் தேர்தலை நேராக சந்திக்காத கட்சி, 2011 சட்டமன்ற தேர்தலிலும் 2014 நாடாளுமன்ற தேர்தலிலும் ஊழலில் ஊறிப்போய் குற்றவாளி என்று பெங்களுரு நீதிமன்றத்தால் தீர்ப்பளிக்கப்பட்ட அதிமுக கட்சியின்  பொதுச்செயலாளர் ஜெயலலிதாவிற்கு ஆதரவாகவும் பிரச்சாரத்தை மேற்கொண்டவர். தற்போதைய 2016ம் ஆண்டு நடைபெறயுள்ள சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி 234 தொகுதியிலும் தனித்துப் போட்டியை காணும் என்று சீமான் தெரிவித்து உள்ளார்.

2011 சட்டமன்ற தேர்தலிலும் 2014 நாடாளுமன்ற தேர்தலிலும் நாம் தமிழர் கட்சி அதிமுகவுக்கு ஆதரவாக எடுத்த நிலைப்படும் தற்போது ஊழல் எதிர்ப்பு நாடகமும் மக்களிடம் நாம் தமிழர் கட்சியை தோலுரித்து காட்டிவிட்டது என்பதே மெய். வருகின்ற 2016 சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி 234 தொகுதியிலும் டெபாசிட் தொகையை இழக்கும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை" என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close