Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

விவசாயிகளின் ரயில் மறியல் போராட்டத்தில் தேமுதிக-மக்கள் நலக் கூட்டணி பங்கேற்பு: வைகோ!

சென்னை: தமிழகத்தில் விவசாயிகள் தற்கொலைக்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், ஜப்தி நடவடிக்கைகளை நிறுத்தக் கோரியும் விவசாயச் சங்கங்களின் கூட்டு இயக்கம் ஏப்ரல் 5 அன்று நடத்தும் ரயில் மறியல் போராட்டத்தில் தேமுதிக - மக்கள் நலக் கூட்டணி பங்கேற்கும் என்று ஒருங்கிணைப்பாளர் வைகோ அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில்,

" உலக மக்கள் அனைவரின் பசி போக்கிட, உழைத்து உணவு படைத்திடும் உழவர் பெருமக்கள் தாங்கள் உற்பத்தி செய்யும் விளை பொருளுக்கு உரிய விலை கிடைக்காததால் நட்டப்பட்டு வாங்கிய கடனை திருப்பி கட்ட முடியாமல் தத்தளித்துக் கொண்டுள்ள நிலையில், கூட்டுறவு மற்றும் வங்கிகளில் தாங்கள் பெற்றுள்ள அனைத்துக் கடன்களையும் தள்ளுபடி செய்யக்கோரி விவசாயிகள் போராடி வருகிறார்கள். விவசாயிகளின் இந்த நியாயமான கோரிக்கையை நிறைவேற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டிய அரசு மௌனம் சாதிக்கின்றது. கடன் தொல்லை தாங்காமல் விவசாயிகளின் தற்கொலைகள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகின்றது.

இதைக் கருத்தில் கொண்டு அமையப் போகும் மக்கள் நலக் கூட்டணி அரசு, விவசாயிகளின் கூட்டுறவு மற்றும் அனைத்து வங்கிக் கடன்களையும் தள்ளுபடி செய்யும் என ஏற்கனவே அறிவித்துள்ளோம்.
உல்லாச வாகனங்கள் வாங்க பெறும் வங்கிக் கடனுக்கு வட்டி வீதம் 7 விழுக்காடு தான். ஆனால் டிராக்டர் போன்ற விவசாய இயந்திரங்களுக்கான வங்கி கடனுக்கு வட்டி விகிதம் 14 விழுக்காடு எனும் அவல நிலையிலும், பெற்ற கடனை பெரும் பகுதியை செலுத்திவிட்டு மீதமுள்ள இரண்டு தவணைகள் மட்டும் பாக்கி வைத்திருந்த தஞ்சை விவசாயி பாலனின் டிராக்டரை ஜப்தி செய்ததையும், அவர் மீது காவல்துறை நடத்திய தாக்குதலுக்கு காரணமானவர்களையும், ஜப்தி நடவடிக்கையில் கடைபிடிக்கப்பட்ட அவலம் தாங்காமல் விவசாயி அழகரின் தற்கொலைக்கு காரணமானவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க கோரியும், மேற்கொண்டு ஜப்தி நடவடிக்கையை நிறுத்தக் கோரியும், ஏப்ரல் 5 ஆம் தேதி, தமிழகம் எங்கிலும் ரயில் மறியல் போராட்டம் நடைபெறும் என்று அறிவித்ததோடு, அந்தப் போராட்டத்திற்கு அரசியல் கட்சிகள் ஆதரவு தரவேண்டும் என்றும் விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கத்தின் சார்பில் அதனுடைய தலைவர் தெய்வசிகாமணி வேண்டுகோள் விடுத்துள்ளார். எனவே, ஏப்ரல் 5 இல் நடைபெறும் இரயில் மறியல் போராட்டத்திற்கு தேசிய முற்போக்கு திராவிட கழகம் - மக்கள் நலக் கூட்டணி ஆதரவு வழங்கும் என்பதோடு, அந்தப் போராட்டத்தில் பங்கேற்கும் என்றும் தெரிவித்துக்கொள்கிறேன்." என்று வைகோ கூறியுள்ளார்.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

'சாக்கடையில் கலந்த ஜெயலலிதா ரத்தம்!'   -எம்பால்மிங் சீக்ரெட்டை உடைக்கும் மருத்துவர்கள் #VikatanExclusive
placeholder

'இருதயம் செயலிழந்து போனதற்கான காரணம் என்ன? திடீரென்று செயலிழந்து நின்று போன இருதயத்தை ஏன் மீண்டும் செயல்பட வைக்க இயலவில்லை? உலகத் தரம் வாய்ந்த உபகரணங்களையும் நிபுணத்துவத்தையும் தோல்வியைத் தழுவச் செய்த காரணங்கள் யாவை?' என்ற கேள்விகளையே மருத்துவர் பீலேயும் அப்போலோ மற்றும் எய்ம்ஸ் மருத்துவர்களும் தமிழக-இந்திய மருத்துவ உலகத்தாரும் தமிழ்நாடு-மத்திய அரசுகளும் கேட்டிருக்க வேண்டும். அதற்கான பதிலைக் கண்டறிய இயன்றளவில் முயற்சியை மேற்கொண்டிருக்க வேண்டும். ஆனால் அதற்கான ஒரு சிறிய துரும்பு அளவிலான முயற்சியைக்கூட இவர்கள் எவரும் மேற்கொள்ளவில்லை என்பதுதான் உண்மை.

Advertisement

MUST READ

Advertisement
[X] Close