Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

5 வருடம் தூங்கிய நத்தம் விஸ்வநாதன் மின் உற்பத்தி பற்றி பேசுகிறார்: தமிழிசை

சென்னை: 5 வருடம் தூங்கி கொண்டிருந்த அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், ஆட்சி முடியும் நேரத்தில் விழித்துக் கொண்டு மின் உற்பத்தி பற்றி பேசுகிறார் என்று தமிழிசை சவுந்தரராஜன் குற்றஞ்சாட்டி உள்ளார்.

இது குறித்து தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களிடம் கூறும்போது, ''இந்திய கம்யூனிஸ்ட் செயலாளர் டி.ராஜா, பா.ஜ.க. 2 ஆண்டு ஆட்சியில் வாக்குறுதியை நிறைவேற்ற வில்லை என்று கூறியுள்ளார். ஊழல் இல்லாத ஆட்சியை தருவோம் என்று பா.ஜ.க. தேர்தல் அறிக்கையில் கூறியிருந்தது. அதன்படி 2 ஆண்டு பா.ஜ.க. ஆட்சியில் ஊழல் குற்றச்சாட்டுகள் எதுவும் இல்லை. அந்த வாக்குறுதியை நிறைவேற்றி இருக்கிறோம்

கடந்த 5 வருடமாக அ.தி.மு.க. அரசு எந்த உருப்படியான திட்டத்தையும் நிறைவேற்றவில்லை. தமிழகத்தில் புதிய மின் உற்பத்தி திட்டம் எதுவும் தொடங்கப்படவில்லை. ஆனால் மத்திய அரசு கொண்டு வரும் திட்டங்களை தங்களுடைய திட்டங்கள் என்று அ.தி.மு.க. அரசு சாதனையாக கூறி வருகிறது.

தமிழக மின்சாரத்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் எங்கு இருக்கிறார் என்று தெரியவில்லை. கடந்த 5 வருடமாக தூங்கி கொண்டிருந்த அவர், ஆட்சி முடியும் நேரத்தில் விழித்து இருக்கிறார். இதுவரையில் மின் திட்டங்கள் பற்றி வாய் திறக்காத அவர் தற்போதுதான் மின் உற்பத்தி பற்றி பேசுகிறார்.

எங்கள் கூட்டணியில் உள்ள புதிய நீதிக்கட்சி, இந்திய ஜனநாயக கட்சி ஆகியவற்றுடன் தொகுதி பங்கீடு குறித்து சுமூக பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. விரைவில் அவர்களுக்கான தொகுதிகள் குறித்த முடிவு அறிவிக்கப்படும்" என்றார்.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ