Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

நான் வெற்றி பெற்ற பிறகு தருமபுரியில் எந்த மோதலும் நடக்கவில்லை: அன்புமணி

திருச்சி: " நான் தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு தருமபுரியில் எந்த மோதலும் நடக்கவில்லை. எங்கள் தலைவர்கள் பேச்சில் மாற்றம் வந்திருப்பதை உங்களால் காண முடியும். சாதி-மதங்களுக்கு அப்பாற்பட்டு செயல்படுகிறேன். நான் முன்னேற்றத்திற்கான அரசியலை முன்னெடுக்கிறேன்" என்று பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

‘உங்கள் ஊரில் உங்கள் அன்புமணி’ என்கிற பெயரில் தமிழகம்  முழுவதும் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடத்தும் பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ், இன்று திருச்சி மலைக்கோட்டை அருகில் உள்ள ராக்போர்ட் வியூ ஹோட்டலில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கரூர் மற்றும் திருச்சி மாவட்ட விவசாய சங்க பிரதிநிதிகள், தொழில் அதிபர்கள், வியாபாரிகள், தன்னார்வ தொண்டு நிறுவன பிரதிநிதிகளுடன் கலந்துரையாடினார்.

நிகழ்ச்சியில் பேசிய, " தமிழகத்தில் அனைத்து குடுங்களையும் பாதிக்கும் பிரச்னைகள் இரண்டு, ஊழலும் மதுவும் தமிழகத்தில் உள்ள தமிழகத்தில் உள்ள 1 கோடியே 97 லட்சம் குடும்பங்களையும் பாதித்துள்ளது. கடந்த 50 ஆண்டுகளாக ஆட்சி செய்த அ.தி.மு.க., தி.மு.க. கட்சிகளால் தமிழகத்தில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. மதுவை ஒழித்தால்தான் தமிழகம் முன்னேறும். எனவே எங்களுக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள்.  இதுவரை நடிகர்களுக்கு வாய்ப்பு கொடுத்தீர்கள், 50 வருடம் அவர்கள் ஆண்டது போதும், ஏன் ஒரு டாக்டருக்கு, படித்தவருக்கு, இன்ஜினியருக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டாமா. எனக்கு வாய்ப்பு கொடுங்கள். ஆக்டருக்கு வாய்ப்பு கொடுத்தீங்க, இப்போது டாக்டருக்கு வாய்ப்பு கொடுங்கள். சினிமாவில் நல்லது செய்தால் ரசிக்கும் நீங்கள், நிஜத்தில் ஒத்துழைக்க மறுக்கிறீர்கள்.

தமிழ்நாட்டில் இப்போதைக்கு நான்கு முதல்வர் வேட்பாளர்கள், ஒருவர் எழுந்திருக்க முடியாதவர், இன்னொருவர் நடக்க முடியாதவர், மற்றொருவர் நடக்க முடியாதவர், கடைசியாக நான், மராத்தான் போட்டிகளில் கலந்துகொண்டு ஓடுபவன், உடலுக்கு முடியாமல் தங்கள் அத்தியாவசிய வேலைகளையே செய்ய முடியாதவர்கள். மக்களின் வேலைகளை, மக்களுக்கு ஊழியம் எப்படி செய்வார்கள். நான் உங்களை தேடி வருவேன்,  இப்போது முதல்வரை சந்திக்க முடியுமா, மன்னராட்சி காலத்தில் நடந்ததைபோல் அரசியல் மாறிவிட்டது. 

தமிழகத்தில் போக்குவரத்து நெரிசல், குடிநீர் பிரச்னை, விவசாயிகள் பிரச்சினை, வேளாண் துறை பிரச்சினை, மீனவர் பிரச்சினை  போன்றவை குறித்து இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பேசினர். அவர்களின் அனைத்து பிரச்னைகளும் தீர்க்கப்படும் என்பதை உறுதியுடன் கூறுகிறேன். தி.மு.க., அ.தி.மு.க. கட்சிகள் வாக்குறுதிகள் மட்டும் கொடுத்தார்கள்.

 

ஆனால் எந்த வித முக்கியத்துவமும் அளிக்கவில்லை. எனவே மக்கள் அந்த இரு கட்சிகள் மீதும் வெறுப்படைந்து கோபத்தில் மாற்றத்தை எதிர்நோக்கி உள்ளனர். அந்த மாற்றத்தை பாட்டாளி மக்கள் கட்சியின் மூலம் மட்டுமே நிறைவேற்ற முடியும்.  மொத்தத்தில் தென்மாவட்டங்களில் எங்களுக்கு ஆதரவு பெருகி வருகிறது என்றவர், டெல்லியிலும், மேற்கு வங்காளத்திலும் மாற்றம் வந்தது போல் தமிழகத்திலும் மாற்றம் வரும். அந்த மாற்றம் எங்களால் மட்டுமே வரும். எங்களுக்கு வாய்ப்பு கொடுக்க மக்கள் தயாராக இருக்கிறார்கள். எனவே, தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைப்போம்" என்றார் உறுதியாக.

தொடர்ச்சியாக கூட்டத்தில் கலந்துகொண்டவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த அன்புமணி, " கடந்த இரண்டு வருடமாக நிறைய மாற்றிக்கொண்டுள்ளோம். ஒவ்வொருவரும் கடந்தகாலங்களில் நிறைய தவறுகள் செய்திருக்ககூடும். நாங்களும் அப்படித்தான், மாற்றம் எங்களிடமிருந்துதான் ஆரம்பம் ஆகனும்.  நான் தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கிறேன். நான் தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு தர்மபுரியில் எந்த மோதலும் நடக்கவில்லை. எங்கள் தலைவர்கள் பேச்சில் மாற்றம் வந்திருப்பதை உங்களால் காண முடியும். சாதி-மதங்களுக்கு அப்பாற்பட்டு செயல்படுகிறேன். நான் முன்னேற்றத்திற்கான அரசியலை முன்னெடுக்கிறேன். வெளிநாடுகளை பார்த்து தமிழ்நாட்டுக்கு என்னென்ன கொண்டுவர முடியும் என திட்டமிடுகிறேன். நிச்சயம் மாற்றத்தை கொண்டுவருவேன்" என்று முடித்தார்.

- சி.ய.ஆனந்தகுமார்

படங்கள்: என்.ஜி.மணிகண்டன்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close