Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கருணாநிதி பிரசார வேன் தயார்!

'ஜெயலலிதா ஆட்சியின் குறைகளை சொல்லவும், தி.மு.க வந்தால்தான் இனி தமிழகம் தாங்கும்' என்று முழங்க தமிழகம் உள்ள மாவட்டம் தோறும் பிரசாரம் செய்ய தயாராகிவிட்டார் கருணாநிதி. 

1951-ம் ஆண்டு திராவிட முதல் மாநாடு நடந்தபோது இளைஞராக கூட்டத்தில் முழங்கியவர்... 2016-ம் தேர்தல் ரேஸிலும் அதே உத்வேகத்துடன் முழங்க இருக்கிறார்.


 
கருணாநிதி பிரசாரத்திற்கு எல்லாம் அழைத்து செல்லப்போகும் அந்த பிரேத்தியேக வேன் அவர் இல்லம் கோபாலபுரத்திற்கு மாலை 4.45 மணிக்கு வந்து சேர்ந்தது. முதலில் ஸ்டாலின், துரைமுருகன், ஏ.வா.வேலு போன்றோர் ஏறி பார்த்தார்கள். 

கருணாநிதியின் சக்கர நாற்காலியை தூக்க ஸ்பெஷல் ஹைடராலிக் லிப்ட் பொறுத்தப்பட்டுள்ளது. சுலபமாக அவர் ஏறி இறங்க முடியும். அவர் அமரும் சேரையும் 360 டிகிரியில் சுழற்ற முடியும். வேன் பின்புறம் நான்கு பேர் அமரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. வேன் முழழுவதும் ஏ.சி வசதி. TN 20 CH3009 என்ற வாகனத்தில் ஏறி புறப்பட போகிறார். தமிழகத்தின் அரசியலில் தவிர்க்கவே முடியாத இந்த சக்தி.

- நா.சிபிச்சக்கரவர்த்தி
படங்கள் : ப.சரவணகுமார்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close