Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பிரசாரத்துக்கு வாகனம் ரெடி... 'சீட்டு'க்காக காத்திருக்கும் ஒரு கட்சியின் விசுவாசி!

மிழக தேர்தல் களம் சூடுபிடித்திருக்கும் இந்த தருணத்தில்,  கட்சிகள் பம்பரமாக சுழன்று வருகின்றன. தொண்டர்கள் முதல் நிர்வாகிகள் வரை தீவிரமாக களத்தில் இறங்கியுள்ளனர். தேர்தலில் போட்டியிட விருப்ப மனுக்கள் தாக்கல் செய்தவர்கள்,  வேட்பாளர் பட்டியலில் தங்களது பெயர் இடம் பெற வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் காத்திருக்கின்றனர். சிலர், தங்களுக்குத்தான் 'சீட்' என்று தொகுதியில் உள்ள முக்கிய நிர்வாகிகள் மற்றும் அமைப்புகளைச் சந்தித்து ஆதரவு கேட்டு வருகின்றனர்.

கட்சிகளை பொறுத்தவரைக்கும் கூட்டணி பேச்சுவார்த்தை இறுதிகட்டத்தை அடைந்துள்ளது. தேர்தல் அறிக்கை, வேட்பாளர் பட்டியல் என பிஸியாக கட்சியின் தலைமை செயல்பட்டு வருகிறது. தி.மு.க தலைமையில் காங்கிரஸ் கூட்டணி இடம் பெற்று இருந்தாலும் இருகட்சிகளுக்கு இடையே தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடித்து வருகிறது. அ.தி.மு.க.வில் விருப்ப மனு தாக்கல் செய்தவர்களுக்கு நேர்காணல் நடத்தப்பட்டு வருகிறது. மக்கள் நலக் கூட்டணியும், தே.மு.தி.க.வும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்த கூட்டணியில் தொகுதி பங்கீடு நடந்து வருகிறது. பா.ம.க தனித்து போட்டியிடுவதாக அறிவித்ததோடு விரைவில் வேட்பாளர் பட்டியலை வெளியிட தயாராகி வருகிறது. பி.ஜே.பி முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை அறிவித்து விட்டது. இவ்வாறு தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தலை சந்திக்க கட்சிகள் தயாராகி வருகின்றன.

இந்த சூழ்நிலையில் பா.ம.க.வை சேர்ந்த சென்னை வேளச்சேரி பகுதி செயலாளர் சகாதேவன், எல்லோரையும் விட ஒருபடி மேலாக தனக்கு நிச்சயம் வேளச்சேரி தொகுதி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தேர்தல் பணிகளில் ஈடுபடத் தொடங்கி விட்டார். தேர்தல் பிரசாரத்துக்கு தயாராக அரசு ஜீப் ஒன்றை ஏலத்தில் எடுத்து,  அதை தேர்தல் பிரசாரத்துக்கு ஏற்ப மாற்றி அமைத்துள்ளார்.

இதுகுறித்து சகாதேவன் கூறுகையில், "பல்வேறு சமூக பணிகளை செய்து வருகிறேன். ஏற்கனவே மாநகராட்சி கவுன்சிலர் தேர்தலில் போட்டியிட்டுள்ளேன். இந்தமுறை வேளச்சேரி தொகுதியில் பா.ம.க சார்பில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்துள்ளேன். கட்சித் தலைமையும் 'சீட்' தருவதாக நம்பிக்கை தெரிவித்துள்ளது. இதனால் தேர்தலை சந்திக்க தயாராகி விட்டேன். அதில் ஒரு கட்டமாக பிரசார வாகனத்தை ரெடி செய்துள்ளேன். வேட்பாளராக என்னை அறிவித்ததும் பிரசார வாகனத்தில் பெயர் மற்றும் சின்னத்தை பொறித்து விட்டு கிளம்ப வேண்டியதுதான்" என்றார்.

-எஸ்.மகேஷ்

எடிட்டர் சாய்ஸ்

ஜெர்சி மாடுகள், பிரேசில் காபி, மருத்துவமனை உறுதி! ஜெயலலிதா பற்றி தோழியின் நினைவலைகள்
placeholder

அதே மாதிரி ஜெயலலிதா தன்னுடைய 10 வயதில் சிவாஜி கணேசன் முன்னிலையில் மயிலாப்பூரில் செய்த நடன அரங்கேற்றப் படங்கள் முதல் அதற்குப் பிறகான அவரது சின்ன வயசுப் படங்களை நாங்கள் தொகுத்திருந்தோம். அதை 2012 ம் ஆண்டு, எனக்கு அவரை சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்த போது கொடுத்தேன். அதைப் பார்த்து ரொம்ப சந்தோஷமாகிட்டாங்க. அந்தப் படத் தொகுப்பை, தன்னோட ஹேண்ட் பேக்ல வச்சுக்கிட்டாங்க. பத்திரமா வைத்துக் கொள்வதாகவும் சொன்னாங்க. சினிமாக்காரங்க என்றால் ஈஸியாக அணுகலாம் என்கிற திரையை உடைத்து, அவங்க தனி ரூட்டைப் போட்டு, அதை மத்தவங்க ஃபாலோ பண்ற அளவுக்கு வாழ்ந்து காட்டினாங்க. குறிப்பா, சினிமா விழாக்கள், நிகழ்ச்சிகளுக்கு போக மாட்டாங்க. 

அம்மாவிடமிருந்து போன் வந்தால்...!? - உருகும் வீணை காயத்ரி
placeholder

''சமீபத்தில் கொலை மிரட்டல் விட்டப் பையனால் அம்மாவை சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. கடந்த ஜூலை 27-ம் தேதி சி.எம் ஆபீஸ்ல இருந்து போன் வந்தது. அம்மா உங்களை உடனே வரச்சொன்னதா சொன்னாங்க. நான் கொஞ்சமும் யோசிக்காமல் போய் நின்னேன். பொதுவாகவே நானும், அவங்களும்தான் தனியாகத்தான் பேசிப்போம். ஆனா, அன்றைக்கு, எல்லா அதிகாரிகளும், இருந்தாங்க. அவங்க முன்னாடி, 'எப்படி இருக்கீங்க' என கேட்டார். நான் பதில் சொல்லிவிட்டு, 'நவம்பர் மாதத்தோடு என்னோட டர்ன் முடியுது' என சொன்னேன். இதற்கு அவர், எல்லோருடைய முன்னிலையிலும், அடுத்த மூன்று வருஷத்துக்கும் நீங்களே துணை வேந்தரா இருங்க என சொல்லிவிட்டு, அவருக்கு பின்னால் இருக்கும் எல்லோரையும் பார்த்து மறுபடியும்  இதையே சொன்னார். அப்போதுதான் அவர்கிட்ட, 'நான் உங்களை சந்திக்க இரண்டு வருஷமாக முயற்சி செய்துட்டு இருந்தேன். இந்த கொலை மிரட்டல் காரணமாகத்தான் உங்களை சந்திக்கிற வாய்ப்பு கிடைச்சிருக்கு, நான் தனி மனுஷியாக இசை பல்கலைக்கழகத்தை நடத்தி வருகிறேன்' என சொன்னேன். உடனே, சம்பந்தப்பட்டவர்களை அழைத்து, அவங்களுக்குத் தேவையான எல்லா உதவிகளையும் செய்து கொடுங்க என சொன்னார்.  'அடுத்த முறைப் பார்க்கும்போது உங்க முகத்துல சிரிப்பை மட்டும் தான் பார்க்கணும்' என ஆறுதல் சொன்னாங்க. அந்த வார்த்தை இன்னும் என் காதில் கேட்டுட்டே இருக்கு. அதுதான் நான் அவங்களை கடைசியாகப் பார்த்தது.  அதற்குப் பிறகு அவரை பார்க்க முடியவில்லை. அவர் சொன்னது போல அதற்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கும்போதே அம்மா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுட்டாங்க. நான் இப்போ அடுத்த ஆர்டருக்காக காத்திட்டு இருக்கேன். இன்னும் ஆர்டர் என் கைக்கு வரவில்லை''

MUST READ