Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

வைகோவிற்கு 'பிரஸ் ஹோமியா' வந்திருக்காம்: விளக்கும் டாக்டர் தமிழிசை!

மதுரை: மக்கள் நலக் கூட்டணி ஒருங்கிணைப்பாளர் வைகோவிற்கு தற்போது 'பிரஸ் ஹோமியா' வந்திருக்கிறது என்று தமிழிசை சவுந்தரராஜன் விமர்சனம் செய்துள்ளார்.

மதுரையில் நடைபெற்ற பா.ஜ.க. தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் பேசும்போது, ''பஞ்ச பாண்டவர்கள் என்று அழைத்துக்கொள்ளும் மன நலக்கூட்டணியைச் சார்ந்தவர்கள் எந்தவிதித்திலும் நமக்கு போட்டி கிடையாது.

தமிழகத்தில் நாத்திகத்திற்கு மாற்றாக ஆத்திகம் ஆட்சி செய்ய உறுதி கொண்டுள்ள கட்சி பா.ஜ.க. மட்டுமே. மேலும், பா.ஜ.க. கூட்டணியில் இருந்து ஏன் விலகினோம் என நினைத்து, வருகின்ற மே மாதம் 19-ம் தேதி விஜயகாந்த் வருந்துவார்.

பத்திரிகையாளர் சந்திப்பில் மக்கள் நலக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் வைகோ கோபப்படுகிறார். நான் ஒரு மருத்துவர் என்ற முறையில் கூறுகிறேன், சாதாரணமாக தண்ணீரை பார்த்து கோபப்பட்டால் 'ஹைட்ரோ ஹோமியா' என்று சொல்வார்கள். அதேபோல், ஒளியை பார்த்து கோபப்பட்டால் அதை 'போட்டோ ஹோமியா' என்று சொல்வார்கள்.

வைகோவிற்கு இப்போது 'பிரஸ் ஹோமியா; வந்திருக்கிறது. கேமராவைப் பார்த்தாலே பயமாக இருக்கிறது என்று வைகோ கூறுகிறார். கேமராவைப் பார்த்தாலே உங்களுக்கு பயம் வந்திருக்கிறது என்றால், தமிழக மக்கள் இன்னும் உங்களை பயமுறுத்த காத்திருக்கிறார்கள்" என்று விமர்சித்தார்.

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!

MUST READ