Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தமிழகத்தில் மோடி அலையை இவர்தான் வீசவைப்பார்கள்!

"இந்தியாவை வெற்றி பாதையில் கொண்டு செல்ல, மக்கள் பா.ஜ.க.விற்கே வாக்களித்து இந்த முறை தமிழகத்தில் மோடி அலையை வீசவைப்பார்கள்" என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் நம்பிக்கை தெரிவித்தார்.

மத்திய பா.ஜனதா அரசின் சாதனை விளக்கப் பொதுக்கூட்டம்,  மதுரையில் நேற்றிரவு நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்,  தமிழிசை செளந்தரராஜன் மற்றும் மாநில நிர்வாகிகளும் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தில் பேசிய ஜவடேகர், " எதிர்கால இந்தியாவை பா.ஜ.க தற்போதே உழைத்து வருகிறது. இயற்கை மற்றும் சுற்றுச்சூழலுக்காக பல திட்டங்களை ஒதுக்கி செயல்பட்டு வருகிறது. சின்ன சின்ன முன்னேற்றங்கள் மிகப்பெரும் வெற்றியாக மாறப்போகிறது. தமிழகத்தில் திமுக, அதிமுக மாறி மாறி ஆட்சிக்கு வருகின்றன. மக்கள் திமுக மேல் உள்ள வெறுப்பால் அதிமுகவிற்கு வாக்கு அளிப்பதும், அதிமுக மேல் கொண்ட வெறுப்பால் திமுகவிற்கும் வாக்களிப்பதும் தொடர்ச்சியாக விட்டது. மக்கள் அவர்களுக்கு மாறி மாறி வாக்களிப்பதால் அவர்கள் மாறி மாறி ஊழல் செய்யத் தொடங்கிவிட்டனர். இந்த நிலை மாற வேண்டும்.

நாடாளுமன்றத் தேர்தலில் எவ்வாறு மோடி அலை இந்தியாவில் வீசியதோ அதைப்போல் தமிழகத்திலும் வீசும். பா.ஜ.க இலவசங்களை கொடுத்து ஏமாற்றாமல் சமுதாயத்தின் தேவைகளை பூர்த்தி செய்கின்றன. சுற்றுச்சூழல் அமைச்சகத்தில் ஊழலை நீக்கி ஒரு கண்ணியமான முன்னேற்றத்தை பா.ஜ.க கண்டுள்ளது. தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடக்காமல் போனதற்கு திமுக, காங்கிரஸ்தான் முக்கிய காரணம். தமிழகத்தில் விவசாயப்பெருங்குடி மக்கள் காளையை தெய்வமாகவும், அன்புடனும் வளர்ப்பார்கள். அதனால் நான் அமைச்சரானதும் ஜல்லிக்கட்டு நடத்த உத்தரவு பிறப்பித்தேன். ஆனால் தற்போது ஜல்லிக்கட்டிற்கு இடைக்கால தடை உள்ளது. எனவே அடுத்த ஆண்டு நடத்த தேவையான வாதங்களை முன்வைத்துள்ளோம். கண்டிப்பாக அடுத்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடக்கும்.

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு, காமன்வெல்த் விளையாட்டுப்போட்டி கட்டடங்கள், நிலக்கரி சுரங்கம் ஒதுக்கீடு என இயற்கை பஞ்சபூதங்களிலும் தனது ஊழலை வெற்றிகரமாக திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணி நிறைவேற்றி உள்ளது. ஆனால் மோடி அரசு வந்தபின் நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் 3 லட்சம் கோடி வருவாய் கிடைத்துள்ளது. எல்.இ.டி பல்பு விலை 400 ரூபாயில் இருந்து 70 ரூபாயாக குறைக்கப்பட்டது. அதனால் 5 கோடி மக்கள் பயன் அடைந்தனர். மக்கள் பணத்தை காட்டிலும் தங்களது மனதை விரும்புபவர்கள். எனவே இந்த முறை தேர்தல் நல்ல முறையில் நடைபெறும். எனவே இந்தியாவை வெற்றி பாதையில் கொண்டு செல்ல மக்கள் பா.ஜ.க.விற்கே வாக்களித்து இந்த முறை தமிழகத்தில் மோடி அலையை வீசவைப்பார்கள்" என்று நம்பிக்கை தெரிவித்தார்.

-சே.சின்னதுரை

படங்கள்:
ஈ.ஜெ.நந்தகுமார்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

சமூக வலைதளத்தில் எதிரிகளை தாங்களே உருவாக்குகிறார்களா ட்ரம்ப்பும், மோடியும்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close