Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஆலங்குடி தொகுதி பெண் வேட்பாளர் திடீர் நீக்கம்- சீமான் நடவடிக்கை

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியின் பெண் வேட்பாளர் தமிழ்செல்வியை திடீரென நீக்கியுள்ளார் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான்.

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் சீமானின் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிடுகிறது. முன்னதாக, கடந்த மாதம் கடலூரில் 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்து அவர்களை ஒரே மேடையில் அறிமுகம் செய்து வைத்தார். அப்போது, புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி சட்டமன்ற தொகுதிக்கு தமிழ்செல்வி என்ற பட்டதாரி பெண் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

இந்த நிலையில், தேர்தல் பணிகள் குறித்து கீரமங்கலத்தில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் கட்சி நிர்வாகிகள் நேற்று முன்தினம் ஆலோசனை கூட்டம் நடத்தி கொண்டிருந்தனர். இந்த கூட்டத்தில் வேட்பாளர் தமிழ்செல்வியும் கலந்து கொண்டார். அப்போது, ஆலங்குடி தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட தமிழ்செல்வி கட்சி நிர்வாகிகளுடன் ஒருங்கிணைந்து செல்ல முடியாத காரணத்தாலும், நீண்ட களப்பயணம் செய்ய வேண்டி இருப்பதாலும் வேட்பாளர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுவதாக கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து ஆலோசனை கூட்டம் பாதியில் ரத்து செய்யப்பட்டது. இந்த அறிவிப்பால் தமிழ்செல்வி அதிர்ச்சி அடைந்தார்.

இது குறித்து தமிழ்செல்வி கூறும்போது, "என்னிடம் எந்த கருத்தும் கேட்காமலும், எனக்கு தெரியாமலும் நீக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏன் என்னை நீக்கினார்கள் என்பது பற்றி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தான் சொல்ல வேண்டும்” என்றார்.

எடிட்டர் சாய்ஸ்

ஜெயலலிதா வாழ்வின் சில ‘கடைசி’கள்!

MUST READ