Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

விஜயகாந்தின் விருந்தைப் புறக்கணித்த ம.ந.கூ தலைவர்கள்! - தொகுதிப் பங்கீட்டில் பஞ்சாயத்து தொடங்கியது

சட்டசபை தேர்தலில் மக்கள் நலக் கூட்டணியுடன், விஜயகாந்தின் தே.மு.தி.க கூட்டணி அமைத்துள்ளது. தே.மு.தி.க 124 தொகுதிகளிலும், ம.ந.கூ 110 தொகுதிகளிலும் போட்டியிடுவது என, தீர்மானிக்கப்பட்டு உள்ளது. ம.ந.கூ ஒருங்கிணைப்பாளர் வைகோ தலைமையில் திருமாவளவன், ராமகிருஷ்ணன், முத்தரசன் ஆகியோர் நேற்று பகல் 2 மணியளவில் கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. தலைமை அலுவலகத்திற்கு சென்றனர். அங்கு விஜயகாந்துடன் தொகுதி பங்கீடு பேச்சு நடந்துள்ளது.
 

தே.மு.தி.க. வட்டாரத்தில் பேசியபோது, ம.ந.கூ போட்டியிட விரும்பும் 110 தொகுதிகளின் பட்டியலை விஜயகாந்திடம் அதன் தலைவர்கள் கொடுத்தனர். அதை பார்த்த விஜயகாந்த், சுதீஷிடம் ஒப்படைத்தார்.  சுதீஷ் ஐந்து நிமிடங்களுக்கு பின், மீண்டும் விஜயகாந்த் அறைக்கு வந்த பின் அவர், ம.ந.கூ தலைவர்கள் கேட்கும் தொகுதிகளில், 65 தொகுதிகள் தே.மு.தி.க. போட்டியிட உள்ள தொகுதிகள் எனக் கூறியுள்ளார். உடனே விஜயகாந்த், இதில் 15 தொகுதிகளை வேண்டுமானால் விட்டுக் கொடுக்கிறேன் எனக் கூறியுள்ளார்.  இதைக் கேட்டதும், ம.ந.கூ. தலைவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

பட்டியலில் உள்ள 30 வட மாவட்ட தொகுதிகளை தே.மு.தி.க. விட்டுக் கொடுத்தே தீர வேண்டும் என்று ம.ந.கூ தலைவர்கள் கூறியுள்ளனர். அதற்கு ஆலோசித்த பின், முடிவை சொல்வதாக  விஜயகாந்த் கூறியுள்ளார்.

கோயம்பேட்டில் உள்ள பிரபல ஓட்டலில் இருந்து, ம.ந.கூ. தலைவர்கள் மற்றும் அவர்களுடன் வந்தவர்களுக்கு, மதிய உணவு வரவழைக்கப்பட்டிருந்தது. ஆனால் விருந்தை புறக்கணித்து  வெளியேறிய ம.ந.கூ தலைவர்கள். வைகோவின் வீட்டிற்கு சென்று விருந்து சாப்பிட்டதாக கூறப்படுகிறது.

- ந.பா. சேதுராமன்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

'சாக்கடையில் கலந்த ஜெயலலிதா ரத்தம்!'   -எம்பால்மிங் சீக்ரெட்டை உடைக்கும் மருத்துவர்கள் #VikatanExclusive
placeholder

'இருதயம் செயலிழந்து போனதற்கான காரணம் என்ன? திடீரென்று செயலிழந்து நின்று போன இருதயத்தை ஏன் மீண்டும் செயல்பட வைக்க இயலவில்லை? உலகத் தரம் வாய்ந்த உபகரணங்களையும் நிபுணத்துவத்தையும் தோல்வியைத் தழுவச் செய்த காரணங்கள் யாவை?' என்ற கேள்விகளையே மருத்துவர் பீலேயும் அப்போலோ மற்றும் எய்ம்ஸ் மருத்துவர்களும் தமிழக-இந்திய மருத்துவ உலகத்தாரும் தமிழ்நாடு-மத்திய அரசுகளும் கேட்டிருக்க வேண்டும். அதற்கான பதிலைக் கண்டறிய இயன்றளவில் முயற்சியை மேற்கொண்டிருக்க வேண்டும். ஆனால் அதற்கான ஒரு சிறிய துரும்பு அளவிலான முயற்சியைக்கூட இவர்கள் எவரும் மேற்கொள்ளவில்லை என்பதுதான் உண்மை.

Advertisement

MUST READ

Advertisement
[X] Close