Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தி.மு.கவை திருப்பியடித்த ம.ந.கூட்டணி வியூகம்!

தேமுதிக நிர்வாகிகள் திமுகவில் கொத்து கொத்தாக  தங்களை இணைத்துக் கொண்டு வரும் வேளையில் திமுகவோடு நேற்று வரை ஆதரவு நிலைப்பாட்டில் இருந்த ஒரு கட்சியை,  ம.ந.கூட்டணியில் கொண்டு போய்ச் சேர்த்திருக்கிறார், திருமாவளவன்.


சற்றுமுன் நிகழ்ந்துள்ள இந்த ஆபரேசனில் சிக்கியிருப்பது இந்திய தேசிய லீக் கட்சி. அதன் தலைவர் தடா ரஹீம் விகடன் இணையத்துக்காக அளித்த பிரத்யேக (மினி) பேட்டி :


நேற்று வரை நீங்கள் திமுக ஆதரவு நிலைப் பாட்டில்தானே இருந்தீர்கள், ஒரே நாளில் இந்த மாற்றம் எப்படி நிகழ்ந்தது?

ஒரு விஷயத்தை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். நாங்கள் எந்தக் காலத்திலும் திமுக ஆதரவு நிலைப்பாட்டை எடுத்ததில்லை. கடந்த பாராளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் ஆதரவு எடுத்தோம். அவர்கள் கூட்டணியில் திமுக இருந்திருக்கலாம், அவ்வளவுதான். அதே வேளையில் நாங்கள்  காலந்தோறும் நம்பிக் கிடந்தது, அதிமுகவைத்தான். அவர்கள் எங்களைக் கை விட்டு விட்டனர்.

இந்த முறை நீங்கள் சொல்வது போல்,  நேற்று வரையில் திமுகவிடம் பேசிப்பார்த்தோம், ஆனால் அவர்கள்,  'தேர்தல் முடியட்டும்... பார்த்துக் கொள்ளலாம்' என்று சொல்லி விட்டனர். தேர்தல் முடிந்ததும் அதிமுகவில் ஜெயலலிதா சொல்வது போலத்தான் அவர்களும் சொல்லப் போகிறார்கள். அதனால்தான் ம.ந.கூ. அணியில் சேர முடிவெடுத்து இங்கே வந்து விட்டோம்.

உங்கள் தேவை என்ன ? எத்தனை தொகுதிகளை திமுகவிடமும், அதிமுகவிடமும் எதிர்பார்த்தீர்கள் ? ம.ந.கூ. அணியில் எத்தனை தொகுதிகள் கேட்டு அவர்கள் ஒப்புக் கொண்டுள்ளனர்?

பத்தாண்டுகளுக்கு மேல் சிறைவாசம் அனுபவிக்கும் இஸ்லாமிய சகோதரர்களை விடுதலை செய்ய வேண்டும் என்பதே எங்களின் ஒற்றைக் கோரிக்கை. அதை மக்கள் நலக் கூட்டணியினர் தேர்தல் அறிக்கையாகவே கொடுத்துள்ளனர். எங்களுக்கு இதைவிட பெரிய சந்தோஷம் இருக்க முடியாது.

இதைத்தான் நாங்கள் ஒவ்வொரு முறையும் ஆட்சியாளர்களிடமும் தொடர்ந்து வலியுறுத்தி வந்திருக்கிறோம்.  ம.ந.கூ. அணியில் தொகுதிகளை எதிர்பார்க்கவில்லை. தொகுதிகள் கொடுத்தால் மகிழ்ச்சியுடன் ஏற்று கூட்டணியின் ஒட்டு மொத்த வெற்றிக்குப் பாடுபட தயாராகவே இருக்கிறோம்.


மக்கள் நலக் கூட்டணிக்கு உங்களுடைய ஆதரவைத் தெரிவிக்க திருமாவுடன் தாயகம்  வந்திருக்கிறீர்கள்... மற்ற தலைவர்கள்  சந்திப்பு முடிந்து விட்டதா, தேமுதிக தலைவரை பார்த்து விட்டீர்களா ?

திரு.வைகோ, திரு. திருமா ஆகியோரிடம் எங்கள் ஆதரவைத் தெரிவித்து விட்டோம். அடுத்ததாக ம.ந.கூ. தலைவர்களை சந்தித்து, ஆதரவைச் சொல்ல விருக்கிறோம். ம.ந.கூ.  தேர்தல் அறிக்கை இஸ்லாமியர்கள் மத்தியில் ஒரு புத்துணர்வை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது. இந்த அணிதான் கோட்டைக்குச் செல்லும் வெற்றி அணியாக இருக்க முடியும்.

நம்பிக்கையுடன் சொல்லி முடித்தார் தடா ரஹீம்.

 ''தேமுதிகவைப் பார்த்து ஸ்டாலின் பயப்படுகிறார் அதனால்தான் எங்கள் கட்சி ஆட்களை தங்கள் பக்கம் இழுத்து கட்சியை உடைக்கப் பார்க்கிறார், அவர் கனவு நிறைவேறாது''  என நேற்றுதான் தேமுதிகவின் பிரசாரப் பொதுக் கூட்டத்தில் பிரேமலதா  கூறியிருந்தார்.

இதுகுறித்து தேமுதிக வட்டாரத்தில் பேசியபோது, ''நீங்க, மாவட்டச் செயலாளர்களையும், எம்.எல்.ஏ.க்களையும் மாத்தி, மாத்தி கழட்டிக்கிட்டுப் போவீங்க... பதிலுக்கு ஏதோ நாங்களும் எங்க லெவலுக்கு சின்னச் சின்னக் கட்சிங்களா உங்க டீம்லயிருந்து 20 கட்சிங்க கிட்டே பேசி முடிச்சிருக்கோம். இது முதல் கட்சியாக்கும்''... என்கின்றனர் .

 ரெடி... ஸ்டார்ட்... ஆட்டம், ஆரம்பம் !


- ந.பா.சேதுராமன்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

ஆனந்த விகடன் சினிமா விருதுகள் - ஸ்பெஷல் ஆல்பம்!
Advertisement

MUST READ

Advertisement
[X] Close