Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஆட்சி மாற்றத்துக்கு தகுதியான கட்சி பா.ம.க. தான்... ஜி.கே.மணி!

திருப்பூர்: தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை அனைவரும் விரும்புகின்றனர். அதனால், ஆட்சி மாற்றத்துக்கு தகுதியான கட்சி பா.ம.க. தான் என்று ஜி.கே.மணி தெரிவித்து உள்ளார்.

பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ''தமிழக தேர்தலில் தற்போது 5 முனைப்போட்டி ஏற்பட்டுள்ளதால், இது பா.ம.க.வுக்கு சாதகமாக அமைந்துள்ளது. பொதுநல அமைப்புகள், பெண்கள், இளைஞர்கள், நடுநிலையாளர்கள் ஆகியோருடைய ஆதரவு பா.ம.க.வுக்கு அதிகம் கிடைத்துள்ளது. இவர்கள் தி.மு.க., அ.தி.மு.க.வுக்கு மாற்றாக ஆட்சி மாற்றம் தேவை என்கின்றனர்.

இதற்கு தகுதியான கட்சி பா.ம.க. தான். 66 சதவீதம் இளைஞர்கள் எங்கள் பக்கம் உள்ளனர். இந்த தேர்தலில் போட்டியிட பா.ம.க., இளைஞர்களுக்கு அதிக வாய்ப்பு அளிக்கும். அ.தி.மு.க., தி.மு.க. உள்ளிட்ட கட்சிகளில் உள்கட்சி குழப்பங்கள் ஏற்பட்டு வருகிறது. இது எங்களுக்கு சாதகமாக அமைந்து வருகிறது. அதனால், ஆட்சி மாற்றத்தை பா.ம.க.வால் மட்டுமே கொடுக்க முடியும். தேர்தல் கருத்து கணிப்புகள் போலியாக தயாரிக்கப்படுபவை.

இந்த தேர்தலில் மதுவிலக்கு பிரசாரமே எங்களின் முக்கிய பிரசாரமாக அமையும். மதுவிலக்குக்காக கடந்த 26 ஆண்டுகளாக போராடி வருகிறோம். தேர்தல் வந்ததும் அனைத்து கட்சிகளும் மதுவிலக்கு கொள்கையை கையில் எடுத்து கொண்டுள்ளனர். பா.ம.க. ஆட்சிக்கு வந்த உடன் தமிழகத்தில் மதுவிலக்கு கொள்கையை அமல்படுத்துவதே எங்கள் நோக்கம்.

பா.ம.க. ஆட்சிக்கு வந்த உடன் நல்லாறு, ஆனைமலை, அமராவதி, ஓடைக்கரை, அவினாசி-அத்திக்கடவு உள்ளிட்ட 2-வது பாசன திட்டங்கள் நிறைவேற்றப்படும். கரும்பு, நெல், கொப்பரை உள்ளிட்ட விவசாய பொருட்களுக்கான விலை கிடைக்கவும், சர்க்கரை ஆலை விவசாயிகளுக்கு நிலுவையில் உள்ள தொகை கிடைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

தொழில் வளர்ச்சிக்கு தேவையான மின்சாரத்தை தங்குதடையின்றி கிடைக்க ஏற்பாடு செய்யப்படும். தொழில்துறையை மேம்படுத்த வரிசலுகை வழங்குவதோடு, புதிய தொழில் தொடங்க திறன் சார்ந்த பயிற்சியும் அளிக்கப்படும். வேளாண் சிறப்பு மண்டலங்கள் உருவாக்கப்பட்டு வேளாண் சார்ந்த தொழிற்சாலைகள் மூலம் உருவாக்கப்பட்டு இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கப்படும்.

தற்போது மக்கள்நல கூட்டணியில் தே.மு.தி.க. இணைந்துள்ளதால் அந்த கூட்டணியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. தே.மு.தி.க. தங்களுடன் இணைந்துவிடும் என்று தி.மு.க. எதிர்பார்த்து இருந்தது. ஆனால், தற்போது கூட்டணியின்றி தி.மு.க. தனித்து விடப்பட்டுள்ளது. அனுபவமுள்ள மூத்த தலைவரான வைகோ, தனது கொள்கையில் இருந்து மாறிவிட்டார்" என்றார்.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close