Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

விஜயகாந்த் முதல்வராவதை ஏற்றுக் கொள்ள முடியாது: சுப.உதயகுமார்

"தமிழகத்தின் 8 கோடி மக்களை ஆட்சி செய்ய,  தகுதியே இல்லாத விஜயகாந்தை தமிழக முதல்வராக ஏற்றுக் கொள்ள முடியாது" என்று பச்சை தமிழகம் கட்சி தலைவரும், கூடங்குளம் அணு உலை எதிர்ப்பாளருமான சுப.உதயகுமார் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

நெல்லையில் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், " பச்சை தமிழகம் கட்சி சார்பில் நான் நெல்லை மாவட்டம் ராதாபுரம் சட்டசபை தொகுதியில் போட்டியிடுகிறேன். உங்கள் வாக்குகளை பெற ஒரு பைசா கூட தரமாட்டேன். கூடங்குளம் அணுமின் நிலையத்தின் 2 அணு உலைகளையும் நிரந்தரமாக மூட முயற்சி செய்வேன். சேது சமுத்திர திட்டத்தை தொடர்ந்து எதிர்ப்பேன். கூடங்குளம் பிரச்னையில் ஒருமித்த கருத்துடன் ஆதரவு தந்த கட்சிகள் எனக்கு ஆதரவு தர வேண்டும். நான் எம்.எல்.ஏ. ஆனால் நேரடியாக சட்டசபையில் அணு உலைக்கு எதிராக குரல் கொடுக்க முடியும் என்பதற்காக தேர்தலில் போட்டியிடுகிறேன்.

மக்கள் நலக்கூட்டணியுடன் பச்சை தமிழகம் கைகோர்ப்பதில் தவறு இல்லை. ஆனால், கூடங்குளம் அணுமின் நிலையம் குறித்து கருத்து தெரிவித்த விஜயகாந்த், மக்கள் அச்சத்தை போக்கிவிட்டு கூடங்குளம் அணுஉலை திட்டத்தை கொண்டு வர வேண்டும் என்றார். எனவே விஜயகாந்தை எந்தக் காரணம் கொண்டும் நாங்கள் ஏற்றுக் கொள்ள முடியாது. விஜயகாந்த் இல்லாமல் மக்கள் நலக்கூட்டணி எங்களை ஆதரித்தால் ஏற்றுக் கொள்வோம். தமிழகத்தின் 8 கோடி மக்களை ஆட்சி செய்ய சில அடிப்படை தகுதிகள் வேண்டும். விஜயகாந்துக்கு இந்த தகுதியே இல்லை. எனவே அவரை தமிழக முதல்வராக ஏற்றுக் கொள்ள முடியாது. அவர் தமிழக முதல்வர் ஆகப்போவதில்லை"" என்று தெரிவித்துள்ளார்.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

'சாக்கடையில் கலந்த ஜெயலலிதா ரத்தம்!'   -எம்பால்மிங் சீக்ரெட்டை உடைக்கும் மருத்துவர்கள் #VikatanExclusive
placeholder

'இருதயம் செயலிழந்து போனதற்கான காரணம் என்ன? திடீரென்று செயலிழந்து நின்று போன இருதயத்தை ஏன் மீண்டும் செயல்பட வைக்க இயலவில்லை? உலகத் தரம் வாய்ந்த உபகரணங்களையும் நிபுணத்துவத்தையும் தோல்வியைத் தழுவச் செய்த காரணங்கள் யாவை?' என்ற கேள்விகளையே மருத்துவர் பீலேயும் அப்போலோ மற்றும் எய்ம்ஸ் மருத்துவர்களும் தமிழக-இந்திய மருத்துவ உலகத்தாரும் தமிழ்நாடு-மத்திய அரசுகளும் கேட்டிருக்க வேண்டும். அதற்கான பதிலைக் கண்டறிய இயன்றளவில் முயற்சியை மேற்கொண்டிருக்க வேண்டும். ஆனால் அதற்கான ஒரு சிறிய துரும்பு அளவிலான முயற்சியைக்கூட இவர்கள் எவரும் மேற்கொள்ளவில்லை என்பதுதான் உண்மை.

Advertisement

MUST READ

Advertisement
[X] Close