Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

என்ன நடக்கிறது கார்டனில்? -அதிர வைக்கும் தொகுதி பட்டியல்!

வழக்கத்திற்கு மாறான பரபரப்புடன் இன்று போயஸ் கார்டன் காட்சியளிக்கிறது. ' எப்போது வேண்டுமானாலும் வேட்பாளர் பட்டியல் வெளியாகலாம்' என்பதால் பதட்டப் பரபரப்பில் இருக்கின்றனர் அ.தி.மு.கவின் ரத்தத்தின் ரத்தங்கள்.

அ.தி.மு.க தொண்டர்களுடன் நேர்காணல், கூட்டணிக் கட்சிகளுடன் சந்திப்பு, சிறிய சிறிய அமைப்புகளின் ஆதரவு என முன்பைவிட உற்சாகமாக இருக்கிறார் அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெயலலிதா. நேற்று முன்தினம் மனிதநேய மக்கள் கட்சியில் இருந்து பிரிந்த தமிமுன் அன்சாரியை வரவழைத்துப் பேசினார். அவர்களிடம், ' விரைவில் பிரசாரத்திற்குச் செல்ல வேண்டும். மக்களைச் சந்திக்க வேண்டும். களநிலவரம் எப்படி இருக்கிறது?' எனக் கேள்வி கேட்டவர், ' கட்சி நிர்வாகிகளை அறிமுகப்படுத்துங்க' எனக் கலகலப்பாகப் பேசியிருக்கிறார் ஜெயலலிதா. " அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லை என்று சொல்வதெல்லாம் வதந்திதான். நல்ல ஆரோக்கியத்தோடு இருக்கிறார்!" என்கின்றனர்.


இதுகுறித்து அ.தி.மு.க சீனியர் ஒருவரிடம் பேசினோம். " ஏப்ரல் 4-ம் தேதி, அதாவது இன்று 234 தொகுதிகளில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை இடங்கள் என்பதை அம்மா இறுதி செய்கிறார். அதனைத் தொடர்ந்து அ.தி.மு.க வேட்பாளர் பட்டியலை முழுமையாக அறிவிப்பார். மாநிலம் முழுவதும் எந்தெந்த தொகுதிகளில் யார் யார் போட்டியிடுகிறார்கள் என்பதை அப்போது அறியலாம். ஐவரணியில் யாருக்கு சீட்? என்பது அன்று தெரிந்துவிடும். அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள் என அனைவருக்கும் தலா மூன்று தொகுதிகள் எனப் பிரித்துக் கொடுத்திருக்கிறார் அம்மா. அந்த தொகுதிகளில் கட்டாயம் வெற்றியை ஈட்டித் தர வேண்டும். உதாரணம், அமைச்சர் வைத்தியலிங்கத்திற்கு ஒரத்தநாடு, தஞ்சாவூர், கும்பகோணம் ஆகிய மூன்று தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த தொகுதிகளில் வெற்றி வாய்ப்பைப் பெறவில்லையென்றால், கார்டனில் என்ன நடக்கும் என்பதும் அவருக்கு நன்றாகவே தெரியும். மற்ற தொகுதி பொறுப்பாளர்களுக்கும் இதே நிலைதான். வேட்பாளர் பட்டியல் வெளியீட்டுக்குப் பிறகு பிரசாரத்திற்கு அம்மா தயாராவார்" என்றார் விரிவாக.

செ.கு.தமிழரசன், வேல்முருகன், தமிமுன் அன்சாரி உள்ளிட்ட சிறிய கட்சித் தலைவர்களுக்கெல்லாம் 'நேரம்' கொடுத்து சந்திக்கிறார் ஜெயலலிதா. இதில், தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியின் நிலைதான் பரிதாபமாக உள்ளது. அ.தி.மு.கவின் இரண்டாம்கட்டத் தலைவர்களே வாசனோடு பேசிவருகின்றனர். ' இரட்டை இலையில் போட்டியிடுவதென்றால் 12 சீட் வரையில் தருகிறோம்' என டிமாண்ட் செய்வதால், தென்னந்தோப்பு அளவுக்கு உள்ள கட்சி சீனியர்களை வைத்துக் கொண்டு என்ன செய்வது? என யோசித்து வருகிறார். அதனால், 'கொடுக்கும் சீட்டுகளை வாங்கிக் கொண்டு அமைதியாக இருந்துவிடலாம்' என்ற மனநிலையில் வாசன் இருக்கிறார்.

கார்டனில் இன்று வெளியாகும் பட்டியலில் வாசனுக்கு இடம் இருக்குமா என்பதும் இன்று மாலைக்குள் தெரிந்துவிடும்.

-ஆ.விஜயானந்த்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close