Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஓ. பன்னீர் செல்வம் மீண்டும் போடி நாயக்கனூரில் போட்டி!

சென்னை: முதலமைச்சர் ஜெயலலிதாவின் கோபத்திற்கு ஆளானதாக சொல்லப்பட்ட அமைச்சர் ஓ. பன்னீர் செல்வத்திற்கு இந்த தேர்தலிலும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

முதலமைச்சர் ஜெயலலிதாவின் கோபத்திற்கு ஆளானதாக கூறப்பட்ட அமைச்சர்கள் பன்னீர் செல்வம், நத்தம் விஸ்வநாதன், வைத்திலிங்கம் உள்ளிட்டவர்களுக்கு,  வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட 'சீட்' வழங்கப்படாது என அக்கட்சியினர் கூறி வந்தனர்.



ஆனால் இன்று வெளியிடப்பட்ட அதிமுக வேட்பாளர் பட்டியலில் பொதுப்பணித்துறை அமைச்சரான ஓ. பன்னீர் செல்வம்,  போடிநாயக்கனூரில் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2011 சட்டமன்ற தேர்தலிலும் பன்னீர் செல்வம் இதே தொகுதியில்தான் போட்டியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

பன்னீர் செல்வம் போன்றே ஜெயலலிதாவின் அதிருப்திக்குள்ளானவர்களின் பட்டியலில் இடம்பெற்ற அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், வைத்திலிங்கம் உள்ளிட்டோருக்கும் இத்தேர்தலில் போட்டியிட சீட் வழங்கப்பட்டுள்ளது.

 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ